குறிப்பாக அவர் உலக நாடுகளுக்கு வரிவிதிப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டவுடன் இந்திய பங்குச்சந்தை உட்பட அனைத்து நாடுகளின் பங்குகளும் இறங்கின. இந்த நிலையில் எந்த நேரத்தில் எந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று திகிலுடன் காத்திருக்கும் நிலையில் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இந்திய பங்குச்சந்தை விடுமுறை என்பது சற்று நிம்மதியை அளித்துள்ளது
இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் பங்கு வர்த்தகர்கள், அடுத்த வாரம் குறுகிய வர்த்தக காலத்துக்கு தயாராகி வருகின்றனர். காரணம், பாம்பே பங்குசந்தை (BSE) மற்றும் தேசிய பங்குசந்தை (NSE) இரண்டும் 3 நாட்கள் மட்டுமே செயல்பட உள்ளன.
அடுத்த வாரம் இரண்டு இரு முக்கியமான விடுமுறை தினங்கள், அதாவது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளிக்கிழமையையொட்டி, பங்குசந்தைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முதன்மை கட்டமைப்பாளர் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், ஏப்ரல் 14, திங்கட்கிழமை, பங்குசந்தைகள் முழுமையாக மூடப்படும். பங்குவர்த்தகம் மறுநாள், ஏப்ரல் 15 மீண்டும் தொடங்கும்.
ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை, கிறிஸ்தவர்களின் புனித நாளான “Good Friday” தினத்திலும் சந்தைகள் மூடப்படும். இதன் காரணமாக, வாரத்தின் தொடக்கமும் முடிவும் இரண்டு முக்கிய விடுமுறைகள் மூலம் நிரம்பியுள்ளன.
இந்த இரண்டு நாள்களிலும் பங்குசந்தைகளின் அனைத்து பிரிவுகளும் அதாவது ஈக்வுட்ட்டி (Equities), டெரிவேட்டிவ்கள், நாணய சந்தைகள் (Currency), பாதுகாப்பு கடனளிப்பு மற்றும் கடன்வாங்கல் (SLB), மின்னணு தங்க ரசீதுகள் (EGR) ஆகியவை அனைத்தும் செயல்படாது.
BSE மற்றும் NSE ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாள்காட்டி படி, இந்த விடுமுறைகள் 2025ஆம் ஆண்டுக்கான 14 முழுமையான சந்தை விடுமுறைகளில் ஒன்று.
2025ஆம் ஆண்டின் முக்கிய பங்குச்சந்தை விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ:
ஜூன் மற்றும் ஜூலை 2025: எந்த விடுமுறையும் இல்லை
ஆகஸ்ட் 15 (வெள்ளி): இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 27 (புதன்): விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2 (வியாழன்): காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி
அக்டோபர் 21-22 (செவ்வாய் & புதன்): தீபாவளி மற்றும் பலி பிரதிபதா
நவம்பர் 5 (புதன்): பிரகாஷ் குருபுரப்
டிசம்பர் 25 (வியாழன்): கிறிஸ்துமஸ்