திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. காஷ்மீரில் மீண்டும் ஊடுருவிய தீவிரவாதிகள்.. சுற்றி வளைத்த இந்திய ராணுவம்..!

  கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதும், இதனை அவ்வப்போது இந்திய ராணுவமும் தடுத்து வருகிறது என்பதும்…

terrorist 1

 

கடந்த பல ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகள், இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதும், இதனை அவ்வப்போது இந்திய ராணுவமும் தடுத்து வருகிறது என்பதும் தெரிந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த ‘பகல்ஹாம்’ தாக்குதல், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியது.

அதில் இந்து என அடையாளம் காணப்பட்டு, அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்தியா, பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை தொடங்கியது என்பதும், அதன் பின் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்காக தாக்குதல் நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் தீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளித்து, இந்தியாவால் தோல்வி அடைந்து வரும் சூழ்நிலையிலும் திருந்தாத ஜென்மங்கள் போல் மீண்டும் தற்போது தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்துள்ளது.

இதன் விளைவாக, ஜம்மு காஷ்மீர் வழியாக சில தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு பேர் கொண்ட தீவிரவாதி குழு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டம், சட்ரூவில் உள்ள சிங்க்போரா பகுதி வழியாக ஊடுருவியதாகவும், இதனை உளவுத்துறை வழியாக தகவல் பெற்ற ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார், தீவிரவாதிகளை சுற்றி வளைத்து துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் இதே பகுதியில் நடைபெற்ற தாக்குதலை இதே தீவிரவாதி குழுவே நடத்தி, பின்னர் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை தப்பிச் செல்ல முடியாத வகையில், அனைத்து வெளியேறும் பாதைகளும் பாதுகாப்பு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இன்னும் சில மணி நேரத்தில் அவர்கள் உயிருடன் அல்லது பிணமாக பிடிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.