‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ வெற்றி.. 30 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுண்டர்.. தலைக்கு ரூ.1.5 கோடி..!

  மாவோயிஸ்ட் ஒருவரின் தலைக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த அந்த நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பல கேசவ் ராவ், முந்தைய…

 

மாவோயிஸ்ட் ஒருவரின் தலைக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த அந்த நபர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த நம்பல கேசவ் ராவ், முந்தைய காலத்தில் கட்சியின் மத்திய ராணுவ ஆணைக்குழு (CMC) தலைவராக இருந்தார். அவருடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தின் வாரங்கல் என்ற பகுதி தான். அங்கு தான் அவர் கல்லூரியில் படித்தபோது மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார்.

நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (NIA), தெலங்கானா போலீஸ் மற்றும் ஆந்திரப்பிரதேச போலீசார் இவரை சில வருடங்களாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சத்தீஸ்கரின் நாராயண்புர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் காடுகளில் நக்சல் நடமாட்டம் இருந்ததை அடுத்து மாவட்ட பாதுகாப்பு காவல் படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீசார் மற்றும் நக்சல்கள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த நடவடிக்கையில் ஒரு DRG வீரர் வீரமரணம் அடைந்தார், மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளனர். ஆனால் ஆச்சரியமாக இந்த தாக்குதலில் தான் சில ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் நம்பல கேசவ் ராவ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய தலைக்கு ரூ.1.5 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையில் AK-47 துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பல நவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்றும், மீதமுள்ள போராளிகளை பாதுகாப்பு படைகள் தேடி வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தமது X கணக்கில் பாதுகாப்புப் படைகளை பாராட்டியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மிகப்பெரிய வெற்றி” என குறிப்பிட்டுள்ளார்..

“இந்த சிறந்த வெற்றிக்காக எங்கள் படைகளை பெருமைப்படுத்துகிறேன். மாவோயிஸ்டின் தீமையை அகற்றுவதே எங்கள் அரசாங்கத்தின் உறுதி, மக்கள் வாழும் சமாதானம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்,” என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, ‘நக்சலிஸத்தை அகற்றும் போர் வழியில் ஒரு மிகப் பெரிய சாதனை. இன்று சத்தீஸ்கரின் நாராயண்புரில் நடந்த நடவடிக்கையில் நமது பாதுகாப்பு படைகள் 27 பேரான பயங்கரவாத மாவோயிஸ்ட்களை நிவர்த்தி செய்துள்ளன. இதில் CPI-மாவோயிஸ்ட் பொதுச் செயலாளர் நம்பல கேசவ் ராவ் என்கவுண்டர் செய்யப்பட்டார். இது மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வரும் நக்சலிசத்திற்கு எதிரான இந்தியாவின் போரில் கிடைத்த வெற்றி’

“நமது துணிச்சலான பாதுகாப்பு படைகள் மற்றும் அமைப்புகளை இந்த பெரிய முன்னேற்றத்துக்கு பாராட்டுகிறேன். மேலும் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ முடிந்த பிறகு சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் 54 நக்சலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசத்தை முற்றிலுமாக அகற்றுவதே மோடி அரசு உறுதியாக உள்ளது,” என்று அமித்ஷா கூறினார்.