தீவிரவாதம் பாகிஸ்தானில் இருந்துதான் தோன்றியது.. அல்ஜீரியாவில் ஆவேசமாக பேசிய ஒவைசி..!

  AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, அல்ஜீரியாவில் நடைபெற்ற ஐநா பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியபோது பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது; மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரஹ்மான்…

ovaisi

 

AIMIM கட்சித் தலைவர் அசதுதீன் ஓவைசி, அல்ஜீரியாவில் நடைபெற்ற ஐநா பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றியபோது பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் பேசியதாவது;

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ரஹ்மான் என்பவர் சிறையில் இருந்த போது, அவருக்கு விசேஷமான சலுகை அளிக்கப்பட்டது என்றும், தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு சிறையில் இருந்தபடியே குழந்தை பிறந்தது என்றும், இது போன்ற ஒரு செயலை எந்த நாடும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கிறது என்றும், அப்பாவி மக்களை கொல்வது இஸ்லாம் மீதான வஞ்சகம் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் அப்பாவி மக்களை கொன்று வருகிறது என்றும், இஸ்லாம் எவரையும் கொல்ல அனுமதிக்காது என்றும், இஸ்லாம் மதத்தின் கொள்கையை புறக்கணித்து தவறாக நம்புகிறார்கள் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

பகல்காமில், இந்து ஆண்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்றும், இஸ்லாமில் பகைத்தன்மை என்பதே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தீவிரவாதம் பாகிஸ்தானிலிருந்து தான் முதன்முதலில் தோன்றியது என்றும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, நிதி உதவி செய்துவருகிறது என்றும், காஷ்மீர் உள்ளிட்ட சில இடங்களில் நிகழும் தீவிரவாத செயல்களுக்கு ஒரே காரணம் பாகிஸ்தான் ஆதரவு தருவதே என்றும் அவர் தெரிவித்தார்.

ஐநா மூலம் தடை செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பா அமைப்பை பாகிஸ்தான் வெளிப்படையாக ஆதரிக்கிறது என்றும், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி குழுக்கள் உதவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்’ மூலம் லஸ்கர் இ தொய்பா உள்ளிட்ட சில பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும், எந்த ஒரு ஆயுதம் எடுக்கும் நபரும் தீவிரவாதி தான் என்றும், அவர்களுக்கு இடம் அளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கே பாகிஸ்தான் ஒரு அச்சுறுத்தல் கொண்ட நாடாக இருக்கிறது என்றும், பாகிஸ்தானை கட்டுப்படுத்தாமல் விட்டால் தெற்காசியா முழுவதும் தீவிரவாதம் பரவ வாய்ப்பு இருப்பதாகவும், உலக அமைதிக்காகவே பாகிஸ்தானை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐநாவில் அவர் பேசிய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.