ஆயிரக்கணக்கான AI உதவியாளர்கள் உருவாக்கம்.. TCS புதிய திட்டத்தால் வேலை பறிபோகுமா?

  இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தங்கள் பணியாளர்களை AI உதவியுடன் மாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆண்டு அறிக்கையில், தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்தார். தானியங்கி…

TCS

 

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தங்கள் பணியாளர்களை AI உதவியுடன் மாற்றும் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ஆண்டு அறிக்கையில், தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்தார்.

தானியங்கி ரோபோக்கள் மற்றும் AI உதவியுடன் செயல்படும் எதிர்கால திட்டங்களை அவர் அந்த அறிக்கையில் விளக்கியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் ஆயிரக்கணக்கான AI உதவியாளர்கள் உருவாக்கப்படும் என்றும்,
அவை மனிதக் குழுக்களுடன் இணைந்து செயல்படும் என்றும், மனிதர்கள் – ஏ.ஐ. கூட்டணியில் பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்குதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் ஆகியவை செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் AI சார்ந்த தரவுத்தளங்கள் மற்றும் cloud கட்டமைப்புகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மனிதர்களை வேலையில் இருந்து நீக்காமல், மனித ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் AI வேலைகளை செய்ய அறிவுறுத்தப்படும் என்றும்,
மனித உழைப்புக்கு துணையாக AI செயல்படும் எனவும் அந்த அறிககி தெரிவிக்கின்றது

இதனால் வேலைகள் வேகமாகவும், குறைகள் இல்லாமலும், ஐடி துறைக்கு முன்மாதிரியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்தில் AI புரட்சி ஏற்படுத்தும் நிலையில், TCS முன்னணியில் நிற்கும் வகையில் தங்களை கட்டமைத்து வருகிறது. திறமையான AI உதவியாளர்கள், திட்டமிட்ட முதலீடுகள் மற்றும் புதுமைக்கு உறுதியாக நிறுவனம், எதிர்கால வேலைக்கழகங்களை புதிய கட்டத்திற்கு உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.