எல்லா புகழும் எனக்கே என்று கூறுபவர் டிரம்ப்.. இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என கூறியது குறித்து விமர்சனம்..!

  முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல்களை தடுக்க முக்கிய பங்காற்றினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு…

trump

 

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், அணு ஆயுதம் கொண்ட அண்டை நாடுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல்களை தடுக்க முக்கிய பங்காற்றினேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறுவது பற்றி, “அது டிரம்ப் குணம், எல்லா விஷயத்திற்கும் அவரே கிரெடிட் எடுத்து கொள்வார் என பேட்டியளித்துள்ளார்.

பிப்ரவரி 22-ஆம் தேதி காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முற்றிலும் நியாயமானது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜான் போல்டன் அந்த பேட்டியில், பாகிஸ்தான் தன்னுடைய எல்லைக்குள் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். அதை செய்ய முடியாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

“இந்தியா, தன்னைக் காக்கும் உரிமையுடன், பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கெதிராக நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தான் தன் நாட்டுக்குள் நடக்கும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த முடியாத நிலை என்பது ஒரு பெரிய பிரச்சனை. இந்தியாவின் நடவடிக்கை முற்றிலும் நியாயமானது. ஆனால் பாகிஸ்தான் இதை சமாளிக்காவிட்டால், அவர்களுக்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,” என்றார்.

டிரம்ப் இந்த அமைதி முயற்சிக்கான புகழை தானே பெற்றுக் கொள்வது குறித்து, “டிரம்ப் கூறுவது இந்தியாவுக்கு எதிரானது எதுவும் இல்லை. அவரது சுபாவமே இதுதான். எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும், அதற்கு அவர் கிரெடிட் வாங்க தயாராக இருப்பார். மற்றவர்கள் ஏதாவது செய்வதற்கு முன்பே அவரே அதை செய்துவிட்டதாக அறிவிப்பார். இது பலருக்கு எரிச்சலாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் அவரது கருத்து இந்தியாவுக்கு எதிரானது அல்ல,” எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பிரதமர் மோடியும், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வாஞ்சும், அமெரிக்க அரசியல் தலைவர் மார்கோ ரூபியோவும் ஆகியோர்களை டிரம்ப் தான் தொடர்பு கொண்டிருக்க வைத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசீம் முநீர் ‘பீல்ட் மார்ஷல்’ பதவிக்கு உயர்த்தப்பட்டதை “கவலைக்கிடமான அறிகுறி” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பாகிஸ்தானுக்குள் உள்ள எதிர்ப்பு குரல்களை ஒடுக்குகிறார்கள். இம்ரான் கான் இன்னும் சிறையில் தான் இருக்கிறார். இது பாகிஸ்தானுக்கே சாதகமில்லாதது. அமெரிக்க அரசு இதைப் பற்றி சீராக பேச வேண்டும்,” என்றும் கூறினார்.

இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிரான தொடர்ந்த போராட்டத்தை வெளிநாடுகளுக்கு விளக்குவதற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளை அனுப்பும் முடிவை அவர் வரவேற்றார். “தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு இந்த தாக்குதல் எவ்வளவு தீவிரமானது என்பதை விளக்குவது முக்கியம். பொதுமக்கள் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல,” என்றார்.