மோடியை பகைத்தவர் பதவியில் இருக்க முடியுமா? ராஜினாமா செய்யும் வங்கதேச அதிபர்.. பெரும் பரபரப்பு..!

  வங்கதேச இடைக்கால அரசு தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ், அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த முடிவுக்கு வராததால் வேலை செய்ய கடினமாக இருப்பதாக கூறி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நேற்று…

india bangaladesh

 

வங்கதேச இடைக்கால அரசு தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ், அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த முடிவுக்கு வராததால் வேலை செய்ய கடினமாக இருப்பதாக கூறி ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நேற்று நள்ளிரவில் பிபிசி வங்கதேச சேவை மூலம் தெரிய வந்துள்ளது.

நான் ராஜினாமா செய்யப்போகிறேன்,  தற்போதைய சூழ்நிலையில் வேலை செய்ய முடியாது போலிருக்கிறது என்று அவர் கூறியதாக இஸ்லாம் பிபிசி வங்கதேசம் செய்தி வெளியிட்டுள்ளது.

யூனுஸ் தனது வேலை செய்ய முடியாத நிலைமைக்கு வந்துவிட்டால், அவரை வைத்திருக்க பயனில்லை. அரசியல் கட்சிகள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், நம்பிக்கை இல்லாத இடத்தில் அவர் ஏன் இருக்க வேண்டும்?” என்று NCP தலைவர் இஸ்லாம் கேள்வி எழுப்பினார்.

கடந்த இரண்டு நாட்களில் யூனுஸின் இடைக்கால அரசு பல சவால்களை எதிர்கொண்டது.

உள்நாட்டு குழப்பங்கள் மட்டுமின்றி இந்தியா திடீரென வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. தரை வழியாக இறக்குமதி செய்யப்படும் சில துறைமுகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஒரு சில துறைமுகங்களில் மட்டுமே இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால் வங்கதேச ஏற்றுமதி பெரும் அளவில் பாதித்துள்ளதாக தெரிகிறது.

வங்கதேச அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததை அடுத்து இந்தியா இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொண்டு வங்கதேசம் எப்படி பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இந்தியாவுடன் நட்பு உறவிலிருந்து வங்கதேச பொருளாதார நிலையை உயர்த்தும் தந்திரத்தை செய்ய யூனுஸ் தவறிவிட்டார் என்றும் அவர் ராஜினாமா செய்வது சரியானது என்று அந்நாட்டு மக்களும் தெரிவித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன