போடா நாசா விஞ்ஞானியே நம்ம முதல்வர் விஜய்யோட ரசிகராம்.. தமிழகம் கடந்து, மாநிலம் கடந்து, நாடு கடந்து பரவிய நம்ம முதல்வரோட புகழ்.. இதில் இருந்து என்ன தெரியுது.. மக்களுக்கு நல்லது செய்யனும்ங்கிற எண்ணம் மனதில் இருந்தால் போதும், உலகமே அந்த எண்ணத்திற்கு தலை வணங்கும்.. விஜய்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.. அதுக்காக அடுத்த அமெரிக்க ஜனாதிபதி விஜய்ன்னு பில்டப் செஞ்சிராதீங்க.. அவர் கடைசி வரைக்கும் தமிழக மக்களுக்கு மட்டும் தான் சொந்தம்…
நாசா அமைப்பின் முன்னாள் விண்வெளி வீரரான டான் தாமஸ் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பாராட்டியுள்ளதுடன், அவரை ஒரு ‘ராக்ஸ்டார்’ மற்றும் இளைஞர்களின் உண்மையான ஹீரோ என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முதல்வர் விஜய் அளித்து வரும் முக்கியத்துவமும், அதற்காக அவர் எடுத்துவரும் முன்னெடுப்புகளும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மிகச்சிறந்த ஒளிமயமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு விண்வெளி விஞ்ஞானி தமிழக முதல்வரின் கொள்கைகளையும், மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இளம் தலைமுறை மாணவர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் மக்கள் செல்வாக்கைக் குறிப்பிட்டுப் பேசிய டான் தாமஸ், தான் விஜய்யின் ஒரு மிகப்பெரிய ரசிகராக மாறிவிட்டதாகத் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் அவர் காட்டும் தனிப்பட்ட அக்கறை பாராட்டுக்குரியது என்றும், இது தமிழக மாணவர்களை உலக அளவில் உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உலக அளவில் பலராலும் கவனிக்கப்படும் இந்தச் சந்திப்பு, தவெக தலைவர் விஜய்யின் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான செல்வாக்கை மேலும் மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
விஜய்யின் இந்தத் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்கள் எதிர்காலத்தில் தமிழகத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முன்னணியில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
முதல்வர் விஜய்யின் இந்தச் சாதனைப் பயணத்திற்கு நாசா விஞ்ஞானி டான் தாமஸ் போன்ற உலகளாவிய பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருவது அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
