இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தற்போது கோவா மாநில அரசு QR குறியீட்டு அடிப்படையில் வாகன ஆவணங்களை சரிபார்க்கிறது. சுற்றுலா பயணிகள் முதலில் கோவா மாநிலத்திற்குள் நுழையும்போது, ஒரு முறை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு தனிப்பட்ட QR குறியீடு வழங்கப்படும்.
எஸ்.எம்.எஸ் வழியாக இந்த QR கோடை பெற்றுக்கொண்டு, மாநிலம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். மீண்டும் போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்தினால், அந்த QR கோட்டை காண்பித்தால் போதும். காவல்துறையினர் அதை ஸ்கேன் செய்து பார்த்து, ஏற்கனவே ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்து கொள்வார்கள். இந்த QR கோடு 12 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை 4,000 QR குறியீடுகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் அவர்களுக்கு பெரும் வசதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. Quick Pass என்ற மொபைல் செயலியின் மூலம் இந்த QR கோடு செயல்படுகிறது. இதே முறையை மற்ற சுற்றுலா தளங்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.