சென்னையின் கோட்டையானது தவெக.. திமுக ஒரு தொகுதியில் கூட முன்னிலை இல்லை..!

தமிழக அரசியலின் அதிகார மையமான சென்னை மாநகரம், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் அரசியல் புரட்சிக்குச் சாட்சியாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தலைநகரின் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்…

vijay in politics

தமிழக அரசியலின் அதிகார மையமான சென்னை மாநகரம், இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு மாபெரும் அரசியல் புரட்சிக்குச் சாட்சியாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தலைநகரின் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் மின்னல் வேகத்தில் முன்னிலை பெற்று, திமுகவின் பல ஆண்டுகால ஏகபோக உரிமையை அடியோடு தகர்த்தெறிந்துள்ளது.

திமுகவின் “வெல்ல முடியாத கோட்டை” என்று வர்ணிக்கப்பட்ட சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, அறிவாலய வட்டாரத்தை உறைந்து போகச் செய்துள்ளது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்தங்கியிருப்பது தமிழக அரசியலில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களோடு சேர்த்து சென்னையைச் சேர்ந்த மூத்த அமைச்சர்கள் அனைவரும் பின்னடைவைச் சந்தித்து வருவது, ஒரு சகாப்தத்தின் முடிவாகவே பார்க்கப்படுகிறது.

முன்னணி நட்சத்திரம் விஜய்யின் அரசியல் வருகை, தலைநகரவாசிகளிடையே, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் இப்போது வாக்குகளாகப் பிரதிபலித்து வருகிறது. சென்னையின் அனைத்து முனைகளிலும் தவெக-வின் கொடி பட்டொளி வீசிப் பறப்பது, திராவிட அரசியலுக்கு மாற்றாக ஒரு புதிய வலிமையான சக்தி உருவெடுத்துள்ளதை உரக்கச் சொல்கிறது. இன்று சென்னை கொடுத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, கோட்டையின் சிம்மாசனத்தில் ஒரு புதிய வரலாறு எழுதப்படப் போவதைத் திண்ணமாக உணர்த்துகிறது.