மைக்ரோசாப்ட் 365 வசதியை பெறுவதற்கு பணம் செலுத்த விரும்பாதவர்களுக்கு இந்த இலவச மாற்று வழியை வழங்க இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த பதிப்புகளுக்கான பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதன் வெளியீட்டு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த விளம்பர பதிப்பில், முகப்பில் நேரடியான விளம்பரங்கள் மற்றும் வலது, இடது புறங்களில் பேனர் விளம்பரங்கள் இடம்பெறும். கூடுதலாக, 15 வினாடிக்கு ஒரு வீடியோ விளம்பரத்தையும் அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளம்பரங்களின் மூலம் வருவாய் ஈட்டப்பட்டு, அதற்கு பதிலாக மைக்ரோசாப்ட் இந்த சாப்ட்வேரை இலவசமாக வழங்க உள்ளது.
இந்த இலவச பதிப்பில் சில கட்டுப்பாடுகளும் இருக்கும். குறிப்பாக, OneDriveவில் மட்டுமே ஃபைல்களை சேமிக்க முடியும், மேலும் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த இலவச பதிப்பு வெளிவந்த பிறகு மட்டுமே, அது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பார்க்க முடியும்.