24 மணி நேரத்துல குற்றவாளியை தூக்க தெரிஞ்ச அதே போலிஸ்தான் அண்ணே அப்பவும் இருந்தது… ஆனா அவங்க கைகளை கட்டிப்போட்டு ரவுடிகளுக்கு ரெட் கார்ப்பெட் விரிச்சது உங்க திராவிட அரசியல் ஜாம்பவான்கள்தான்! சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தூசு தட்டி அவங்க லிஸ்ட்டை கையில் எடுத்தாச்சு… இனிமேல் பெண்களையோ, குழந்தைகளையோ தப்பான கண்ணோட்டத்துல பார்த்தா, உங்க சரித்திரமே இங்க சர்வநாசமாயிடும், ஜாக்கிரதை!

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் தொடர் குற்ற சம்பவங்களும், அதில் அடுத்தடுத்து சிக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பின்னணியும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நிலவி வந்த தொய்வினை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அண்ணா…

vijay police

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் தொடர் குற்ற சம்பவங்களும், அதில் அடுத்தடுத்து சிக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பின்னணியும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நிலவி வந்த தொய்வினை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம், தூத்துக்குடியில் கல்லூரி மாணவிக்கு நடந்த துயரம், கோவை விமான நிலைய பகுதியில் அரங்கேறிய அநாகரிக இன்னல் என அடுக்கடுக்கான குற்றங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி சுதந்திரமாக உலா வந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தற்போது கோவையில் ஒன்பது வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான துன்பத்திற்கு பக்கத்து வீட்டுக்காரரே காரணமாக அமைந்திருப்பது, சமூகத்தில் குற்றவாளிகளின் துணிச்சல் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை உணர்த்துகிறது. தமிழக காவல்துறை இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ச்சியாகவும் துல்லியமாகவும் கண்காணித்திருந்தால், மேலே குறிப்பிட்ட எந்தவொரு கொடூரமான குற்றமும் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் கசப்பான எதார்த்தம்.

கோவையில் சிறுமிக்கு நேர்ந்த இந்த துயரச் சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, துரிதமாக செயல்பட்ட காவல்துறை இரண்டு முக்கிய குற்றவாளிகளை சுழற்றி பிடித்து கைது செய்துள்ளது. காவல்துறையின் இந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களின் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது. ஆனால், இதே காவல்துறைதான் கடந்த காலங்களிலும் தமிழ்நாட்டில் இருந்தது; இதே திறமையான அதிகாரிகள்தான் அப்போதும் பணியில் இருந்தனர். அப்படியென்றால், சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை வேட்டையாடும் அளவுக்கு தற்போதைய தவெக ஆட்சியில் சுதந்திரமாக செயல்படும் காவல்துறையின் கைகளை, கடந்த கால திராவிட ஆட்சிகளில் கட்டிப்போட்டு வைத்திருந்தது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி சாமானிய மக்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் தற்போது பலமாக எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழக காவல்துறை என்பது ஆளுங்கட்சியினரின் அரசியல் தேவைகளுக்காகவும், அவர்களின் சொந்த பழிவாங்கல்களுக்காகவும் மட்டுமே ஏவல் துறையாக பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்தது. காவல் நிலைய எல்லைக்குள் இருக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகள் மீது காவல்துறையினர் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க முற்படும்போதெல்லாம், அரசியல் செல்வாக்குமிக்க உள்ளூர் புள்ளிகளிடமிருந்து வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அந்த நடவடிக்கையை முடக்கி போடும் அவலம் நிலவியது. குற்றவாளிகளுக்கு பின்னால் இருந்த இத்தகைய அரசியல் நிழல்களும், ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடுகளுமே காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு, அவர்களை தங்களின் கடமையை செய்யவிடாமல் தடுத்தன. இதன் விளைவாகவே, ரவுடிகள் எவ்வித பயமுமின்றி சமூகத்தில் உலவி, மாணவிகளுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான கொடூரங்களை அரங்கேற்றினர்.

அரசியல் குறுக்கீடுகளால் காவல்துறையின் உளவுத்துறையும் , ரவுடிகளைத்தொடர்ந்து கண்காணிக்கும் நடைமுறைகளும் முற்றிலும் செயலிழந்து போயின. ஒரு காவல் நிலையத்தில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளி தினமும் என்ன செய்கிறான், அவனது நடமாட்டம் யாரிடம் இருக்கிறது என்பதை சட்டப்படி கண்காணிக்க வேண்டிய போலிஸார், ஆளுங்கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கும், விஐபி பாதுகாப்புகளுக்கும் மட்டுமே அலையவிடப்பட்டனர். இந்த தளர்வை பயன்படுத்தி கொண்ட குற்றவாளிகள், தங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியல் பின்புலத்தை நம்பி, எந்தவொரு சட்டத்திற்கும் அஞ்சாமல் பெண்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறினர். காவல்துறைக்கு தார்மீக சுதந்திரம் மறுக்கப்பட்டதன் நேரடி விளைவைத்தான் தமிழகத்தின் மாணவிகளும், பிஞ்சு சிறுமிகளும் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்து சந்திக்க வேண்டியதாயிற்று.

தற்போதைய புதிய தவெக ஆட்சியில், முதலமைச்சர் விஜய் அவர்கள் காவல்துறையின் அன்றாட செயல்பாடுகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்கக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உறுதிகாட்டி வருகிறார். அதன் வெளிப்பாடுதான், கோவையில் குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் கூண்டோடு தூக்கப்பட்ட அதிரடி நிகழ்வாகும். தவெக அரசு காவல்துறைக்கு வழங்கியுள்ள இந்த முழுமையான செயல்பாட்டு சுதந்திரம், முடங்கிக் கிடந்த அதிகாரிகளுக்குப் புதிய வீரியத்தை கொடுத்துள்ளது. அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கு இடம் தராமல், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களின் பின்னணியை பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற தற்போதைய அரசின் தீர்க்கமான அணுகுமுறை, குற்ற உலகிற்கு ஒரு பலமான எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.

காவல்துறைக்கு இதுபோன்ற முழுமையான சுதந்திரத்தையும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்து கொடுத்து பாருங்கள்; இன்னும் சில வருடங்களிலேயே குற்றமே நடக்காத ஒரு மிகப்பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் அடியோடு மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பட்டியலை தூசு தட்டி, அவர்களின் தினசரி நடவடிக்கைகளை கண்காணிக்கும் கட்டாய நடைமுறையைத் தவெக அரசு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கிச் சீரழியாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மட்டுமே காவல்துறை கவனம் செலுத்தினால், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் முற்றிலும் பூஜ்ஜிய நிலையை எட்டும். புதிய அரசின் இந்த துணிச்சலான மற்றும் நேர்மையான போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், தமிழக வரலாற்றில் ஒரு புதிய பாதுகாப்பு விடியலை ஏற்படுத்தும் என மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.