சிந்து நதிநீரை திறந்து விடாவிட்டால் மீண்டும் தாக்குதல்: பாகிஸ்தான் எச்சரிக்கை.

  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது…

sindhu

 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இசாக் டார் இன்று விடுத்த எச்சரிக்கையில் எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால், தற்போது அமலில் உள்ள “போர் நிறுத்த ஒப்பந்தம்” மீறப்படலாம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிஎன்எனுக்கு இன்று அளித்த பேட்டியில் சிந்து நதிநீர் பிரச்சனைக்கு வரும் பேச்சுவார்த்தை கூட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையென்றால் போர்நிறுத்த ஒப்பந்தம் மீற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்தியா சிந்து நதிநீரை நிறுத்த எடுத்த முடிவுக்கு காரணம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தது தான். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் தன் போக்கை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வராமல் இருக்கும் போது, இந்தியா அந்த ஒப்பந்தத்தை தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் உரையிலும்  “இனி இரத்தமும், நீரும் சேர்ந்து ஓட முடியாது” என்று தெளிவாக கூறினார். இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணமே இல்லை என்றும் இந்திய வெளிவிவகாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் இருநாட்டு ராணுவ இயக்குநர்களுக்கும் நேரடி பேச்சுவார்த்தைக்கு மறுப்பளித்துள்ளது. அதேவேளை, இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

அதேபோல் இந்தியாவும் பாகிஸ்தான் மீது மேற்கொண்ட பதிலடி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய கட்டமாகும்.”

“இனிமேல் இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுமானால், அதற்கு தக்க பதிலடி கிடைக்கும். அணு ஆயுதங்களை வைத்து பயமுறுத்தும் யாரையும் இந்தியா ஏற்காது,” என  எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம், உலக வங்கியின் உதவியுடன் ஒன்பது ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கையெழுத்தானது. இதில், மேற்குப் பக்க நதிகளான சிந்து , ஜீலம், செனாப் ஆகியவற்றை பாகிஸ்தான் பயன்படுத்த, கிழக்குப் பக்க நதிகளான ரவி, பியாஸ், சட்லெஜ் ஆகியவற்றை இந்தியா பயன்படுத்தும் உரிமை கொண்டது. மேற்குப் பக்க நீரிலிருந்து 20% வரை இந்தியா பயன்பாடு மேற்கொள்ளலாம்.