கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று இரவு மிகப்பெரிய தற்கொலைப்படை குண்டுவெடிப்பால் அதிர்ச்சி ஏற்பட்டது. அஃப்கான் எல்லைக்கருவில் உள்ள குலிஸ்தான் பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் மீது Tehreek-i-Taliban-e-Pakistan இயக்கத்தினர் படுபயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சில பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இந்த நடவடிக்கைக்கு Tehreek-i-Taliban-e-Pakistan பொறுப்பேற்றுக் கொண்டது. இதுகுறித்து வெளியான அறிக்கைகளின் படி, எங்கள் இயக்கம் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்று கொள்கிறது. இதனை எங்கள் தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறிவிக்கிறோம். எங்கள் தற்கொலை படையினர் மூலம் தாக்குதல் நடத்தி, ராணுவ முகாமுக்குள் புகுந்து பாதுகாப்பு படையினருடன் கடுமையான மோதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்து, 11 பேர் காயமடைந்திருக்கலாம் என உள்ளூர் செய்திகள் கூறுகின்றன. இந்த குண்டுவெடிப்பு முகாமுக்கு அருகே உள்ள ஒரு சந்தை அருகே நடந்தது. அதே நேரத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
இந்த தாக்குதலுக்கு பின் அந்த பகுதியில் பல மணிந் ஏரம் துப்பாக்கிச் சப்தங்கள் கேட்டதாகவும், பாதுகாப்பு படையினர் தாக்குதலை எதிர்த்து பதிலடி அளித்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவு முதல் இன்று காலை வரை பாகிஸ்தான் ராணுவம் இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவ கோட்டையில் ஏற்பட்ட இந்த தாக்குதல், சமீபத்தில் Tehreek-i-Taliban-e-Pakistan செய்த இரண்டாவது பெரிய தாக்குதலாகும். இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த அமைப்பு குஜ்தார் பகுதியில் பாதுகாப்பு தணிக்கை நிலையத்தை குறிவைத்து, அங்கு பாதுகாப்பு படையினரின் நான்கு உறுப்பினர்களை கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.