இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதல் மற்றும் 26 பேர் உயிரிழந்த கொடூரமான பஹல்காம் பயங்கரம் காரணமாக அதிகரித்த பரபரப்புகளின் பின்னணியில், இந்தியா முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் சமூக விரோத மற்றும் சந்தேகமான செயல்களை கண்டறிந்து கண்காணிப்பை துரிதப்படுத்தியுள்ளன.
இதன் ஓர் பகுதியாக, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கூட்டணியில் இரகசிய சேவையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, ஜோதி மல்ஹோத்ரா, பஹல்காம் தாக்குதலை அடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்திற்கு கேக் கொண்டு வந்த அந்த நபருடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் கழித்து, ஏப்ரல் 24-ஆம் தேதி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் டெலிவரி பாய் உடையில் தாடியுடன் கூடிய ஆண் நுழையும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
அவர் ஒரு கேக்கை கையில் கொண்டிருந்தார். அவரது வருகையின் நோக்கத்தை பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்தார். அவரது மௌனம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலை கேக் வெட்டி பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் கொண்டாடியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கேக் கொண்டு வந்த நபருடன் ஜோதி இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியிருப்பதை பார்க்கும்போது, அந்த கொண்டாட்டத்தில் ஜோதியும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
‘Travel with JO’ என்ற யூடியூப் சேனலின் பின்னணியில் உள்ள ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் டேனிஷ் என்கிற அதிகாரியுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பாகிஸ்தானின் ஆபரேஷன்களில் ஒரு உளவுக் கருவியாக பயிற்சி பெற்றிருப்பதாக அதிகாரிகள் நினைக்கின்றனர்.
போலீசார் கூறுவதன்படி, மல்ஹோத்ரா 2024 ஆம் ஆண்டில் இரு முறை பாகிஸ்தான் சென்றுள்ளாராம். அந்த பயணங்களில் ஒருமுறை, பாகிஸ்தான் அதிகாரி அஹ்சான்-உர்-ரஹீம் உடன் சந்தித்ததாகவும், அவரது தொடர்புகளில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஹிஸார் காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் குமார் சவான் கூறியபோது, ‘ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் அதிகாரிகளோடு மட்டுமல்லாது, பாகிஸ்தான் தகவல் அதிகாரிகளோடும் தொடர்பு கொண்ட மற்ற இந்திய இன்ஃப்ளூயென்சர்களோடும் தொடர்பில் இருந்தார் என்று தெரிவித்தார்.