கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல், ஈரானின் அணு உலைகள் மற்றும் முக்கிய ராணுவ இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டிக்க முயன்று வெளியிட்ட ஒரு சமூக வலைத்தளப் பதிவில் கண்டனம் என தெரிவிப்பதற்கு பதில் காண்டம் என பதிவு செய்தது பெரும் நகைச்சுவையாக மாறி வருகிறது.
இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்து ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “I condemn” (நான் கண்டிக்கிறேன்) என்பதற்கு பதிலாக “I condom” (நான் காண்டம்) என்று தவறுதலாக டைப் செய்ததாக ஒரு ஸ்கிரீன்ஷாட் காட்டுத் தீயாக பரவி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலை கண்டிக்கும் நோக்கில் எழுதப்பட்ட இந்த பதிவு, உடனே இணையத்தில் விவாதங்களையும், எண்ணற்ற மீம்களையும் அள்ளிவிட்டது.
X தளத்தில் பரவிய அந்த ஸ்கிரீன்ஷாட்டில், “I condom the attack on Iran by Israel…” என்ற சொற்றொடர் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இந்த பதிவு ஒரே நொடியில் நகைச்சுவைக்குரியதாக மாற்றியது. “பாகிஸ்தான் பிரதமர் ஈரானுக்கு ஆதரவாக ‘கண்டனம்’ என்பதற்கு பதிலாக ‘காண்டம்’ என்று தவறுதலாக எழுதினார். பின்னர் அவர் அதைச் சரிசெய்தார்,” என்று ஒரு பயனர் ஸ்கிரீன்ஷாட்டுடன் பதிவிட்டிருந்தார்.
உடனே சமூக வலைத்தளங்கள் முழுவதும் சிரிப்பலைகளும், மீம்களும் குவிந்தன. “I condom this too” (நானும் இதைக் காண்டம் செய்கிறேன்) என்று பயனர்கள் அந்த வரியை மாற்றி மாற்றி பதிவிட்டு கேலி செய்தனர். சிலர் இதை “இந்த ஆண்டின் சிறந்த தட்டச்சுப் பிழை” என்றும் குறிப்பிட்டனர். இந்தப் பதிவு உண்மையான தட்டச்சுப் பிழையா அல்லது நகைச்சுவைக்காக எடிட் செய்யப்பட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர். “தட்டச்சுப் பிழையோ இல்லையோ, அந்த ட்வீட் இப்போதைக்கு மறக்க முடியாதது,” என்று ஒரு பயனர் எழுதினார்.
இந்தப் பதிவின் உண்மைத்தன்மை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட்டை தவிர, அதன் இருப்பை உறுதிப்படுத்தும் நம்பகமான ஆதாரம் எதுவும் இல்லை. பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் ஈரானுக்கு முழு ஆதரவுடன் “condemn” என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பயனர் AIயிடம் நீக்கப்பட்ட அந்த ட்வீட்டை தரும்படி கேட்டபோது, அது நீக்கப்பட்ட பதிவை மீட்டெடுக்க முடியாது என்று கூறியது. ஆனால் க்ரோக், “ஆம், தட்டச்சுப் பிழை உண்மையாகவே இருந்ததாக தெரிகிறது. பாகிஸ்தான் பிரதமர் ‘condemn’ என்று கூற நினைத்து, இஸ்ரேலின் ஈரான் தாக்குதல் குறித்த பதிவில் ‘condom’ என்று எழுதிவிட்டார். சமூக வலைத்தளங்கள் அதைச் சிரிக்கும் ஈமோஜிகளுடன் கேலி செய்தன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அதை சரிசெய்திருக்கலாம் என கூறியது