இந்தியா தாக்குதலினால் மரணம் அடைந்த பயங்கரவாதியின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிதி உதவி செய்த நிலையில், உள்ள பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, எங்களுக்கு அல்வாவா என்று பாகிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் இந்த திடீரென போராட்டம் நடத்தி வருவதாகவும், பாகிஸ்தானில் இருந்து சீனா செல்லும் சாலையை மூன்று நாட்களாக முடக்கி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒரு பகுதியில் தற்போது முற்றுகை போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து வருவதாகவும், இந்த பகுதி வழியாகத்தான் சீனாவுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல இருக்கும் நிலையில், தற்போது அந்தப் பகுதியே போக்குவரத்து முடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானை சேர்ந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகவும், அரசின் வர்த்தக கொள்கைகள் சுரண்டல் மற்றும் பொருளாதார கொலை என ஆக்ரோஷமாக அவர்கள் கோஷமிட்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்கள் வாழ முடியாத அளவிற்கு பொருளாதார பஞ்சம் தலைவிரித்து ஆடி வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு கோடிக்கணக்கில் நிதி உதவி கொடுக்கும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனை அடுத்து, வர்த்தகர்களின் இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டதால், இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததாக கூறப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தான் போரின் படுதோல்வியை கூட வெற்றியாக கொண்டாடி வருகிறது என்றும், இந்த போலியான கொண்டாட்டம் எதற்கு என்று முதலில் மக்களின் அடிப்படை தேவைகளை கவனிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் இனியாவது தாங்கள் இந்தியாவுடனான போரில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தம்பட்டத்தை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.