பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சண்டை காட்சிகளில் நடிப்பார் என்பதும், குறிப்பாக உயரமான இடத்தில் இருந்து குதிக்கும் போதெல்லாம் அவர் டூப் இன்றி நடிப்பார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் விபத்திலிருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தில் இருந்து ஒரு சிறுவன் ஜம்ப் செய்து, கம்பியை பிடித்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வேகமாக வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது, சைடிலிருந்து திடீரென ஒரு வேன் வருவதை பார்த்த இளைஞர் வண்டியை திருப்புகிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக, தண்ணீருக்குள் வண்டி விழ வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில், மூன்றாவது ஆக உட்கார்ந்து இருந்த ஒரு சிறுவன் நிலைமையை ஒரு நொடியில் சுதாரித்து, வண்டியில் இருந்து குதித்து அருகில் உள்ள கம்பியை பிடித்துக் கொண்டார்.
அதன் பிறகு, கம்பியில் இருந்து ஜம்ப் செய்து தனது உயிரை காப்பாற்றிக் கொண்டார்.
தண்ணீருக்குள் விழுந்த நபர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றாலும், அந்த சிறுவன் ஜம்ப் செய்ததுதான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ளது.
டாம் குரூஸ் கூட பிச்சை வாங்கனும் அந்த அளவுக்கு, எந்த விதமான ரிகர்சலும் இல்லாமல், நொடி நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு காப்பாற்றிக் கொண்ட அந்த சிறுவனுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
https://x.com/TheFigen_/status/1928783536951099603