பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘The Daily Telegraph’ பத்திரிகை, பாகிஸ்தான் விமானப்படையை ‘Undisputed King of the Skies’ என அழைத்ததாக கூறினார். இதை பெருமையாக சொன்னார். ஆனால் சில மணி நேரத்திலேயே, அந்த படத்தை போலி எனக் காட்டியது வேறு யாரும் அல்ல, பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் ‘Dawn’ தான்.
Dawn-இன் iVerify Pakistan ஃபேக்ட்-செக்கிங் குழு அந்த படத்தை ஆராய்ந்ததில், அந்த தலைப்பு உண்மையில் ‘The Daily Telegraph’ வெளியிட்டதல்ல, அதை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகவும், முற்றிலும் போலியானது எனவும் உறுதிப்படுத்தியது.
இந்த சம்பவத்தை இந்திய வலைத்தள பயனாளர்களும், அரசியல் தலைவர்களும் விடாமல் வச்சு செய்தனர். பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாலவியா, டார் உரையின் வீடியோவை பகிர்ந்து, “பொய்களின் வலை” என விமர்சித்தார். மாலவியா தனது எக்ஸ் தளத்தில் “தவறான செய்தியை கூறி நாடாளுமன்றத்தையே தவறாக வழி நடத்தினார் இஷாக் டார். இது பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகையே பொய் என நிரூபித்தது’ என்றார்.
இந்த நிகழ்வு தனித்தனி தவறு அல்ல. ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கர தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாத முகாம்களை அழித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பல போலி தகவல்களை பரப்ப முயன்றது. பழைய வீடியோக்கள், தவறான விளக்கங்கள், AI படங்கள் என அனைத்தும் ஒவ்வொரு முறையும் வேறுவிதமாக வெளிக்கொண்டு வந்தன. ஆனால், இந்த தவறுகள் தங்களை ட்ரோல் செய்யும் வகையில் இருந்தாலும், அதைப்பற்றி பாகிஸ்தான் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.