நாட்டை காக்க உயிர் நீத்த பெல்ஜியன் ஷெப்பர்டு பெண் நாய்.. மரணத்திற்கு பின் உயரிய விருது..!

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்கோதாலு மலை பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பெல்ஜியன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ரொலோ என்ற பெண் நாய், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்தது.…

dog

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்கோதாலு மலை பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பெல்ஜியன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ரொலோ என்ற பெண் நாய், நாட்டின் பாதுகாப்புக்காக உயிர்நீத்தது. இந்த நாய் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு நாய்ப்படை அணியில் இருந்தது.

ஏப்ரல் 27ஆம் தேதி, வெடிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை கண்டுபிடிக்க குழுவுடன் ரொலோ அனுப்பப்பட்டது. அதே சமயம், நாய்ப்படையை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கியது. ரொலோவை காப்பாற்ற, அவரது ஹேண்ட்லர்கள் துணியால் மறைக்க முயற்சி செய்தாலும், தேனீக்கள் கடந்து வந்து சுமார் 200 தடவைகள் கொட்டியது.

வலி மற்றும் பயத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரொலோ, கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி பெரும் ஆபத்தில் சிக்கியது. உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டாலும், அது வழியிலேயே உயிரிழந்தது.

ரொலோவின் தியாகம் நாடெங்கும் உள்ள மக்களின் மனங்களை தொட்டது. அதன் வீரத்திற்காக CRPF டைரக்டர் ஜெனரல், “DG’s Commendation Disc” என்ற உயரிய விருதை மரணத்திற்கு பின் வழங்கினார். வீர மரணப்படை வீரர்களுக்கே தனியுரிமையோடு வழங்கப்படும் ரிவர்ஸ்ட் ஆர்ம்ஸ் மரியாதையுடன், ரொலோவுக்கு அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ரொலோ, அபாயங்கள் வரும் முன் தன்னாலான பாதுகாப்பாக இருந்தது. மனிதக் கண்கள் காண முடியாத ஆபத்தை உணர்த்தும் வீர நாயாக இருந்தது அதன் வீரமும், விசுவாசமும், நாட்டுப்பற்றும் என்றும் இந்தியாவின் வீர வரலாற்றில் எழுந்துரைக்கும் வகைஇயில் உள்ளது.