பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!

  பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் முஇத் பிர்சாதா, இந்தியாவின் உதம்பூர் விமானப்படை தளம் சேதமடைந்தது என்பதும், ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் எல்லை பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பதும் பொய்யானது…

pak journalist

 

பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் முஇத் பிர்சாதா, இந்தியாவின் உதம்பூர் விமானப்படை தளம் சேதமடைந்தது என்பதும், ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் எல்லை பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பதும் பொய்யானது என தெளிவாகக் கூறியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு, பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் இந்தியாவில் எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், இந்தியா துல்லியமான தாக்குதல்களில் 24க்கும் மேற்பட்ட இலக்குகளை பாகிஸ்தானுக்குள் தாக்கியுள்ளது என்றும் பிர்சாதா தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் ஒன்றும் இந்தியாவுக்கு சேதம் செய்யவில்லை. ஆனால் இந்தியா இரண்டு அல்லது மூன்று வகையான ஏவுகணைகளை பயன்படுத்தி, 24க்கும் மேற்பட்ட இடங்களை துல்லியமாகத் தாக்கியுள்ளது,” என அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கூறிய உதம்பூர் விமானத் தளம் அழிக்கப்பட்டது என்பது முற்றிலும் பொய்யானது எனவும், “அந்த விமான நிலையத்தில் இருக்கும் ரன்வே கூட சேதமடையவில்லை” எனவும் பிர்சாதா கூறியுள்ளார்.

இந்திய அரசு செய்தியாளர்களுக்கு சாட்டிலைட் படங்களுடன் விளக்கங்களை வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் எந்த ஆதாரமும் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் ஆயுதங்களின் செயல்திறன் குறித்து கடுமையாக விமர்சித்த பிர்சாதா, “பெரிதும் சேதமடைந்த பின் அமெரிக்காவிடம் கடைசி முறையாக கெஞ்சியதே உண்மை நிலையை காட்டுகிறது,” என்றும் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் பயன்பாடற்றதோடு, துல்லியமும் இல்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது,” என அவர் வலியுறுத்தினார்.

உண்மையை சொல்வதற்காக தான் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகிறேன் எனக் குற்றம்சாட்டிய அவர், “நாங்கள் உண்மை பேசும்போதெல்லாம் சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்கின்றனர்,” என வருத்தம் தெரிவித்தார்.

தற்போது பிர்சாதா மீது பாகிஸ்தான் தேசிய சைபர் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசு அமைப்புகளுக்கு எதிராக வெறுப்பான பிரச்சாரம் நடத்தியதாகவும், பொய்யான தகவல்களை பரப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூறியவை அனைத்தும் சர்வதேச ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டவை என்பது தான் உண்மை.

இதற்கு முன், இந்தியாவின் S-400 ஏர்பேஸ் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் அழித்துவிட்டதாகக் கூறியிருந்தது. ஆனால் இந்தியப் பிரதமர் மோடி, அந்த இயங்கும் S-400 அமைப்பின் முன்னே புகைப்படம் எடுத்தபோதுதான் அந்த பொய் வெளிச்சத்திற்கு வந்தது.

தூக்கத்தில் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், இராணுவத் தலைவர் அசிம் முனீர் அவர்கள் இரவு 2.30 மணிக்கு பாதுகாப்பு லைன் மூலம், “இந்தியா பல விமான தளங்களை தாக்கியுள்ளது” என தகவல் வழங்கியதாக மக்களின் முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.

இதன் மூலம் இந்தியா மேற்கொண்ட தாக்குதல்களின் உண்மை நிலையும், பாகிஸ்தானின் தகவல் அனைத்தும் பொய் என வெளிப்படையாகி விட்டது.