பாகிஸ்தானை சேர்ந்த உளவுத்துறைக்கு உதவி செய்ததாக ஜோதிம் மல்ஹோத்ரா என்ற பிரபல பெண் யூடியூபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் “டானிஷ்” என்ற ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானுக்கு ஜோதிம் மல்ஹோத்ரா பயணம் செய்ய டானிஷ் ஏற்பாடு செய்ததோடு, இந்தியாவுக்கான ரகசிய தகவல்களை சேகரித்து பகிரும் பணிகளுக்காக அவரை நியமனம் செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல பயண யூடியூப் சேனலை இயக்கி வந்த ஜோதிம் மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்துள்ளார். இது இந்திய தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் ரகசிய தகவல்களை வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை நடந்த விசாரணையில் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் தகவல்களை அவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு முன் பஞ்சாப் மாநிலம் மாலேர் கோட்லா, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 6 பேர் பாகிஸ்தானுக்கு உளவுத்துறை தகவல்களை தரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் “டானிஷ்” உடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இச்சம்பவம், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்களை வெளிநாட்டு உளவுத்துறைகள் பயன்படுத்து வாய்ப்பு பற்றி அதிர்ச்சியூட்டியுள்ளது. சமூக வலைத்தள பயனாளர்கள் உளவுத்துறை பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்ற ஆபத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது.
ஜோதிம் மல்ஹோத்ராவின் தகவல் தொடர்புகளை ஆய்வு செய்து, மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறியும் பணியில் போலீஸ் மற்றும் உளவுத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.