முதலில், 37 வயதான வினித் குமார் துபே என்ற நபர், முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார். இது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை தூண்டியதால் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். அதன் பின்னர், 30 வயதான மயங்க் கடியார் என்ற இன்னொரு இளைஞரும், அதே கிளினிக்கில் சிகிச்சை மேற்கொண்ட பிறகு உயிரிழந்தார்.
இருவரும் ‘எம்பயர் கிளினிக்’ என்ற பெயரில் இயங்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதை டாக்டர் அனுஷ்கா திவாரி மற்றும் அவரது கணவர் டாக்டர் சௌரப் திரிபாடி இணைந்து இயக்கி வந்தனர். போலீசார் கூறியதன்படி, அவர்கள் இருவரும் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள், ஆனால், மருத்துவ அனுமதியற்ற மற்றும் பயிற்சி பெறாத நபர்களை, சிகிச்சையில் உதவ நியமித்திருந்தனர்.
தேசிய மருத்துவ ஆணையம் இதுகுறித்து கூறியபோது, ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் உள்ளிட்ட அழகு சார்ந்த சிகிச்சைகளை நடத்த நவீன மருத்துவத்தில் பயிற்சி பெற்ற அனுமதிக்கப்பட்ட பதிவு பெற்ற மருத்துவரே செய்யக்கூடும்.
முடியின் உடலியல், சாய்வு, தோலின் அமைப்பு மற்றும் நரம்புகள் பற்றிய அறிவு, முடி உதிர்வுக்கு காரணங்களை புரிந்து கொள்ளும் திறன், ஹேர் டிரான்ஸ்பிளாண்டுக்கு ஏற்புடையவர்களை தேர்வு செய்யும் அறிவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலைகள், சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய பராமரிப்பு, மற்றும் உயிர் காக்கும் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய புரிதலும் இந்த அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு இருக்க வேண்டும்
எனவே முடி மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்கள், சரியான மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். இல்லையே உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.