நீங்கள் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரைபரா? உங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து..!

  நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களை குறிவைத்து ஒரு மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் விதவிதமான மோசடிகள் செய்யப்படும் நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு…

 

நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரைபர்களை குறிவைத்து ஒரு மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன் மூலம் விதவிதமான மோசடிகள் செய்யப்படும் நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு போலியாக மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. அந்த மின்னஞ்சலில், உங்களுடைய சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு ஒரு லிங்க் அனுப்பப்படும்.

அந்த லிங்கை கிளிக் செய்தால், அச்சு அசலாக நெட்பிளிக்ஸ் இணையதளம் போலவே ஒரு போலியான இணையதளம் திறக்கப்படும். அதில் “Update Account” என்று சிவப்பு நிறத்தில் ஒரு பட்டன் இருக்கும். அந்த பட்டனை அழுத்தினால், கட்டணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படும்.

அதில் உள்நுழைந்து, உங்களுடைய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விவரங்களை பதிவு செய்தால், அந்த விவரங்கள் அனைத்தும் மோசடியாளர்களிடம் சென்று விடும். அதன் பிறகு, உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் காலியாகும் வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற மோசடியில் பலர் ஏமாந்து வருவதாகவும், காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில், இது குறித்த விழிப்புணர்வை நெட்ஃப்ளிக்ஸ் ஏற்படுத்தியுள்ளது.

நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வ நெற்றி எப்போதும் தங்களது சப்ஸ்கிரைப்‌பர்களுக்கு மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் செய்தி அனுப்பாது என்றும், எனவே சப்ஸ்கிரைப்‌பர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

பொதுவாக, இது போன்ற போலி மின்னஞ்சல்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் மற்றும் சிறிய அளவில் லோகோ மாற்றம் இருக்கும். ஆனால், இந்த மோசடி செய்யும் இணையதளம் அச்சு அசலாகவே நெட்பிளிக்ஸ் இணையதளம் போலவே, ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல், லோகோவும் சரியாக உள்ளது. இதனால், பலர் ஏமாந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோசடியாளர்களிடமிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

அனுப்புனரின் மின்னஞ்சல் முகவரியில் சிறிய வேறுபாடுகள் உள்ளனவா என்று பாருங்கள். போலி இணையதளத்திற்கான URL சரியாக உள்ளதா என்று கவனிக்கவும். Netflix இன் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் “@netflix.com” முடிவுடன் இருக்கும். மின்னஞ்சலில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு பரிசோதிக்கவும்.

உள்நுழைய அல்லது கட்டணம் செலுத்த, நேரடியாக Netflix இணையதள முகவரியை (https://www.netflix.com) சென்று கட்டணம் செலுத்தவும், ஒருவேளை ஏமாற்றப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

தவறுதலாக உங்கள் தகவல்களை உள்ளிட்டிருந்தால், உடனடியாக உங்கள் Netflix கடவுச்சொற்களை மாற்றவும். உங்கள் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளை அவ்வப்போது கண்காணிக்கவும்.