தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அலை அடித்துக் கொண்டிருப்பதை தற்போதைய கள நிலவரங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. பல தசாப்தங்களாக தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும், அடிமட்ட அரசியல் கட்டமைப்பையும் தங்களோட சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த திராவிக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒரு முற்றுப்புள்ளியாக அமையப்போகின்றன என்ற விவாதம் மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. காலம் காலமாக உள்ளாட்சி அமைப்புகளை தங்களின் சொந்த கோட்டை என்றும், தங்களை மீறி இங்கு வேறு எந்த ஒரு புதிய சக்தியும் கால் பதிக்க முடியாது என்றும் பில்டப் கொடுத்து வந்த பாரம்பரியக் கட்சிகளின் தலைமைகளுக்கு, இந்த முறை தேர்தல் முடிவுகள் ஒரு மரண பயத்தை ஏற்படுத்ப் போகிறது என்பது தான் யதார்த்தமாக உள்ளது.
வழக்கமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பெரிய கட்சிகள் காட்டும் பண பலமும், அதிகார பலமும் அடிமட்ட உள்ளாட்சி தேர்தல்களில் அப்படியே எடுபட்டுவிடும் என்ற கணக்கு இந்த முறை தலைகீழாக மாற தொடங்கியுள்ளது. தமிழக மக்கள் தங்களின் அரசியல் விழிப்புணர்வை மிக ஆழமாக நிரூபிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை திராவிடக் கட்சிகள் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை. இந்த முறை அவர்களின் மொத்த கணக்கும், அவர்கள் எதிர்பார்த்த கோடிக்கணக்கான வாக்கு வங்கிகளும் சரிந்து, வெறும் ஒண்ணு ரெண்டு கவுன்சிலர் சீட்டுகளோடு மட்டுமே நிக்கப்போகும் ஒரு விசித்திரமான சூழல் உருவாகி வருகிறது. இது திராவிட பாரம்பரியத்திற்கு மக்கள் வைக்கும் முற்றுப்புள்ளி மட்டுமல்ல, அவர்களின் ஒட்டுமொத்த அரசியல் வீழ்ச்சிக்கான ஒரு தெளிவான ஆரம்பப்புள்ளியாக அமையப் போகிறது.
திராவிட பேரியக்கங்களின் இந்த திடீர் சரிவுக்கு மிக முக்கிய காரணம், அவர்கள் மக்கள் மீது வச்சிருந்த பிடி என்பது நிரந்தரமானது என்ற அவர்களின் அதீத நம்பிக்கையாகும். ஒவ்வொரு தேர்தலின் போதும் தற்காலிகமான இலவச திட்டங்களையும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அள்ளி வீசி, வாக்காளர்களை தங்களின் பின்னால் வரவழைத்துவிடலாம் என்று அவர்கள் போட்ட தப்பு கணக்கு இந்த முறை சுக்குநூறாக உடையப்போகிறது. மக்கள் இப்போது வெறும் மேடை பேச்சுகளையும், வெற்று முழக்கங்களையும் தாண்டி, தங்களின் அன்றாட தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சுகாதாரம் மற்றும் லோக்கல் அட்மினிஸ்ட்ரேஷனில் இருக்கும் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தையே முதன்மையாக எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
இந்த சூழலில், தமிழக வெற்றி கழகம் போன்ற புதிய எழுச்சிமிக்க மாற்று சக்திகளும், நீண்டகாலமாக கொள்கைக்காக அடிமட்ட அளவில் உழைத்து கொண்டிருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி இயக்கங்கள், முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலில் தாராளமாக இடங்களை கைப்பற்ற போகின்றன. பெரிய திராவிட கட்சிகளின் நிழலில் இருந்து விடுபட்டு, தங்களின் சொந்த மக்கள் செல்வாக்கை நிரூபிக்க கிடைத்த இந்த அரிய வாய்ப்பை இந்த இயக்கங்கள் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. சின்னத்தை பார்த்து ஓட்டு போடும் பழைய பாணியை மாற்றி, உள்ளூரில் தங்களுக்கு உடனே வந்து உதவும் நல்லவர்கள் யார் என்று பார்த்து வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டதால் மாற்றுச் சக்திகளின் கரம் ஓங்கியுள்ளது.
பொதுவாக உள்ளாட்சி தேர்தல் என்பது மாநில அளவில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை விட, உள்ளூர் தலைவர்களின் தனிப்பட்ட நேர்மையும், அணுகுமுறையும் தான் வெற்றியை தீர்மானிக்கும். பெரிய திராவிட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களின் சின்னத்தையும், அதிகாரத்தையும் மட்டுமே நம்பி களமிறங்கிய வேளையில், மாற்று சக்திகளின் வேட்பாளர்கள் மக்களின் அன்றாட பிரச்சினைகளை தங்களின் சொந்த பிரச்சினையாக கருதி களத்தில் நின்று மக்களின் மனங்களை வென்றுள்ளனர். மேலிருந்து இயக்கப்படும் எந்த ஒரு அரசியல் வியூகமும், கீழ்த்தட்டு மக்களின் உண்மையான தேவைகளுக்கு முன்னால் இந்த முறை துளிகூட வேலைக்காவ வில்லை என்பது தேர்தல் களத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.
சுருக்கமாக சொன்னால், வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் பாதையையே மாற்றியமைக்க போகும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லாகும். அலறப்போகும் திராவிடக் கட்சிகளின் கூடாரங்களை அவர்கள் தங்களின் சொந்த கண்களாலேயே வேடிக்கை பார்க்க போகும் காலம் வெகுதொலைவில் இல்லை. பாரம்பரிய கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட்டு, ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு தயாராகிவிட்ட தமிழக மக்கள், தவெக மற்றும் பிற மாற்று அரசியல் சக்திகளின் கூட்டணியோடு தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய, தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாக சகாப்தத்தை எழுத போகிறார்கள் என்பது மட்டும் தற்போதைய கள நிலவரங்களின் மூலம் தெளிவாக புரிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
