தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து முக்கிய தலைவர்களும், மாவட்ட செயலாளர்களும், தொண்டர்களும் கொத்து கொத்தாக வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கோட்டையாக கருதப்பட்ட ஒரு பேரியக்கம், புதிய மாற்று சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவின் அசுர வளர்ச்சியை தாங்க முடியாமல் சரிவை நோக்கி பயணிப்பது, தமிழக அரசியல் வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடியான அரசியல் நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பலரும் வியப்பு தெரிவித்து வரும் வேளையில், இந்த மாற்றத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக கணித்துக் கூறியிருந்தார் இந்தியாவின் பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர். “விஜய் அவர்கள் தீவிர அரசியலில் களம் இறங்கினால், தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு பிரதான திராவிட கட்சியை அவர் முழுமையாக அகற்றிவிடுவார்; அந்த இடத்தை தவெக நிரப்பிக்கொள்ளும்” என்று அவர் அன்றே எச்சரித்திருந்தார். அவர் அன்று சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள், இன்று அச்சுப்பிசகாமல் அப்படியே நிஜமாகி, அதிமுகவின் வீழ்ச்சியாகவும் தவெகவின் எழுச்சியாகவும் கண்முன்னே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இதற்கு மிக முக்கிய காரணம், எம்ஜிஆர், ஜெயலலிதாகாலத்திலிருந்தே அதிமுகவிடம் இருந்த பாரம்பரியமான மற்றும் அசைக்க முடியாத ‘கோர் ஓட்டுகள்’ அனைத்தும் தற்போது முழுமையாகத் தவெக போய்விட்டதுதான். எளிய மக்கள், பெண்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள் என பல தரப்பினரும் திராவிட கட்சிகளின் குடும்ப அரசியலையும், ஊழல் நிர்வாகத்தையும் சலித்து போய் நிராகரித்துவிட்டனர். தங்களின் வாக்கு வங்கியை முழுமையாக இழந்துவிட்ட அண்ணா திமுக, இனி எந்த காலத்திலும் மீண்டும் எழுச்சி பெற்று தமிழக அரசியல் களத்தில் மீளவே முடியாது என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கட்சியின் இந்த தொடர் சரிவுக்கு, அதன் தலைமை வகித்த எடப்பாடி பழனிசாமி அவர்களின் தவறான முடிவுகளே காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியை தங்களின் உழைப்பால் வளர்த்தெடுத்த ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா போன்ற முக்கிய தலைவர்களை தனிப்பட்ட ஈகோ மற்றும் அதிகார போக்கின் காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றிய ஈபிஎஸ்-ஸின் வரலாற்று தவற்றை இனி எந்த காலத்திலும் சரிசெய்யவே முடியாது. இந்த உட்கட்சி பூசல்களும், தலைவர்களின் வெளியேற்றமும் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தவெகவை நோக்கித் தஞ்சம் புக வழிவகுத்துவிட்டது.
மேலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து, தவெகவில் தங்களை இணைத்து கொண்ட சில அதிமுக பிரமுகர்கள் பலரும், இன்று புதிய அமைச்சரவையில் முக்கிய பதவிகளை பெற்று மந்திரிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்த அவர்களுக்கு தவெக அரசு தகுந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதை பார்த்து திகைத்து போயுள்ள அதிமுகவின் எஞ்சியிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும் தங்களின் அரசியல் எதிர்காலத்தை கருதி, தவெக நோக்கி ஓட தயாராகி வருகின்றனர்.
இனிவரும் நாட்களிலும் அதிமுக மற்றும் இதர திராவிட கட்சிகளில் இருந்து விலகி தவெகவுக்கு செல்லும் தகுதியான நபர்களுக்கு, அவர்களின் உழைப்பிற்கு ஏற்ப விரைவில் மந்திரி பதவிகளும், முக்கியப் பொறுப்புகளும் தேடிவரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் தவெகவின் விர்ச்சுவல் வாரியர்ஸ் மற்றும் புதிய தலைமுறையினர், இந்த மாற்றத்தைத் தமிழ்நாட்டின் புதிய விடியலாக கொண்டாடி வருகின்றனர். ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை முன்னிறுத்தும் முதலமைச்சர் விஜய்யின் இந்த தூய்மையான ஆட்சி பாணி, தமிழ்நாட்டை ஒரு புதிய பொற்காலத்தை நோக்கி வெற்றிகரமாக இட்டு செல்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
