தன்னுடைய வீட்டில் ரோனால்டோ மெஸ்ஸியை குளிப்பாட்டி, முடி வெட்டி அழகாக மாற்றி, ஒரு நல்வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்துகிறார். மேலும் அவருக்கு என ஒரு சொந்த வீட்டையும் கொடுக்கிறார். இந்த வீடியோவில் ரோனால்டோ மற்றும் மெஸ்ஸி இடையிலான நல்ல நெருக்கமும் காணப்படுகின்றது.
இந்த AI வீடியோ தற்போது ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. மெஸ்சி மற்றும் ரோனால்டோவின் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு பல வினோதமான கமெண்டுகளுடன் பதிலளிக்கின்றனர். குறிப்பாக ஒருவர் ரொம்ப ஓவராத்தான் போறீங்கடா.. என கமெண்ட் அளித்துள்ளார்.
இந்த AI வீடியோ காமெடிக்காக எடுக்கப்பட்டது என்றாலும் உண்மையில் மெஸ்ஸி இன்றைக்கு உலகின் மிக செல்வந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர். லியோனல் மெஸ்சியின் சொத்து மதிப்பு $650 மில்லியன் முதல் $800 மில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்படுகிறது. அவரது வருமானம் விளையாட்டு சம்பளம் மட்டுமல்ல, பல பிரபலமான பிராண்டுகளின் விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளும் அடங்கும். மேலும், மெஸ்ஸி உலகம் முழுவதும் பிரமாண்ட வீடுகள், சூப்பர் கார்கள், தனியார் ஜெட் விமானங்களையும் வைத்திருக்கிறார்.
ரோனால்டோ மற்றும் மெஸ்சியின் இந்த AI வீடியோ வெறும் சினிமா போல் இருந்தாலும், மெஸ்ஸி இவ்வளவு மோசமான நிலைமையில் இருப்பதை பார்ப்பது அவரது தீவிர ரசிகர்களின் மனதை நிச்சயமாக பாதித்திருக்கக்கூடும்.
https://x.com/rose_k01/status/1909295261437882671