துருக்கியில் இந்திய யூடியூபர் கைது.. அப்படி என்ன தப்பு செய்தார்? அதிர்ச்சி தகவல்..!

  துருக்கி நாட்டில் இந்தியன் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் துருக்கி பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் Malik SD Khan…

youtuber

 

துருக்கி நாட்டில் இந்தியன் யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் துருக்கி பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூபர் Malik SD Khan என்பவர் ‘Malik Swashbuckler’ என்ற பெயரில் யூடியூபில் பிரபலமானவர். அவர் துருக்கியில் உள்ள பல இடங்களை படம் பிடித்து தனது YouTube சேனலில் பதிவு செய்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமிலும் இந்த வீடியோவை அவர் பதிவு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், அவர் ஒரு வீடியோவில் துருக்கி பெண்கள் குறித்து பாலியல் குற்றச்செய்திகளை கூறிய போது சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதனை அடுத்து, அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் தனது YouTube மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை டெலிட் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், அவரது வீடியோ கிளிப்புகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

சமூக வலைதளங்களில் வெளியான கிளிப்புகளின் படி, ஹிந்தியில் சில மோசமான வார்த்தைகளை பெண்களுக்கு எதிராக அவர் பயன்படுத்தியதாகவும், “தான் பேசுவதை உள்ளூர் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நம்பி, அவர் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசிய நிலையில் துருக்கியைச் சேர்ந்த சிலர், அவர் சொன்னதை புரிந்து, புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனது YouTube இல் பெண் ஒருவரை “விலைமாது” என்று அழைத்ததாகவும், வழிகாட்டி பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டுமா என்று கேட்டதாகவும், ஒரு கடைக்குள் நுழைந்து இந்திய கொடியை ஏன் பிரதான இடத்தில் வைக்கவில்லை என மோசமான வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அவரது பேச்சுக்கள் துருக்கியில் உள்ள பலருக்கு புரியவில்லை என்றாலும், சிலர் அதை புரிந்து கொண்டு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, துருக்கி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இருப்பினும், அவரது கைது குறித்து துருக்கி போலீசார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி நடந்ததால், துருக்கிக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்திய யூடியூப் ஒருவர் துருக்கியில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.