இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான துப்பாக்கிச் சண்டை தணிய காரணமாக முழு புகழையும் சுமத்த விரும்பவில்லை என்றாலும், தாம் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பரபரப்பை குறைக்க தாம் நடுவர் பார்வையில் செயல்பட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். மேலும், இரண்டு நாடுகளுக்கும் வர்த்தகத்தை குறித்தாக கடுமையான எச்சரிக்கையும் கொடுத்ததாக கூறியிருந்தார். ஆனால், இந்திய அரசு அந்தக் கூறுகளை மறுத்த நிலையில் திடீரென இன்று பல்டி அடித்த டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனையின் தீர்வுக்கு தான் துணையாக இருந்ததை மட்டுமே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் மேலும் கூறியதாவது:
“இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பரபரப்பை குறைக்க நான் ஒரு முக்கிய பங்கு செய்தேன். இது நூற்றாண்டுகள் பழமையான பிரச்சனையாய் இருக்கலாம், ஆனால் நான் அந்த கலக்கத்தைக் குறைக்க உதவினேன். முழுமையாக என்னுடைய செயல் என சொல்ல விரும்பவில்லை. ஆனாலும், கடந்த வாரம் ஏற்பட்ட பிரச்சனையில் நிச்சயமாக எனக்கும் ஒரு பங்கு உண்டு என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக வதந்திகளை பரப்பும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளிகள் ட்ரம்பு தான் இந்த பிரச்சனையை தீர்த்து வைத்தேன் என சொன்னதை மிகைப்படுத்தி செய்தி வெளியிட்டனர். ஆனால் தற்போது அதே ட்ரம்ப் திடீரென பல்டி அடித்ததை அடுத்து அந்த கும்பல் மௌனம் ஆகி உள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுதான் சாக்கு என்று இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மத்திய அரசு எப்படி அமெரிக்காவை அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது ட்ரம்பின் இன்றைய கருத்துக்கு பிறகு மௌனம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ட்ரம்ப் பயமுறுத்தல் காரணமாக இந்த போர் நிறுத்தப்படவில்லை என்பதும் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மனிதாபிமானத்தின் காரணமாக இந்தியா தற்போதைக்கு போரை நிறுத்தி உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது