இது குறித்து HP நிறுவனத்தின் தலைமை நீதி அதிகாரி கரைன் பார்கில் கூறியதாவது: “ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் தாக்கத்தை சமாளிக்கவும், முக்கிய வளர்ச்சியை தொடரவும், செயற்கை நுண்ணறிவு முதலீடுகளை மேற்கொள்ளவும் செலவுகளை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் காரணமாக 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டின் கணக்கின்படி, HP நிறுவனத்தில் மொத்தம் 58,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 2000 பேர் வேலை இழக்கலாம் என்று கூறப்படுகிறது.
வருவாய் மற்றும் செலவுகளில் மேம்பாடு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக HP நிறுவனம் தெரிவித்துள்ளதை HP நிறுவன ஊழியர்கள் மறுத்து வருகின்றனர். HP நிறுவனம் மிகப்பெரிய லாபத்தில் இயங்கி வருகிறது என்றும், இந்த வேலைநீக்கம் தேவையில்லாதது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கம்ப்யூட்டர் விற்பனை 5% வளர்ச்சி பெறுவதோடு, இதன் வருவாய் 9.2 பில்லியன் டாலராக இருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 10% விற்பனை அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த வேலை நீக்க நடவடிக்கையை எடுக்க HP நிறுவனம் உறுதியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.