உலக அளவில் பிரபலமான டெக்னி கலர் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் பீரேன் கோஸ் இதுகுறித்து கூறியபோது, ‘நிதி சிக்கல் உட்பட சில காரணங்களால் டெக்னி கலர் இந்தியா எதிர்பாராத விதமாக மூடப்படுகிறது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் பிப்ரவரி மாத சம்பளம் வழங்கப்படாது. வேறு ஏதேனும் பண விநியோகம் நிலுவை இருந்தால், தேவையான நிதி கிடைப்பதை பொறுத்து வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
டெக்னி கலர் குழுமம் VFX, மூவ்மென்ட் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் சேவைகளை மீடியா, பொழுதுபோக்கு மற்றும் விளம்பரத்துறைகளுக்கு வழங்கும் முன்னணி நிறுவனம் என்பதும், இந்த நிறுவனம் தான் ‘The Lion King’ மற்றும் ’Mufasa’ போன்ற படங்களுக்கு VFX பணி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.