வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதற்கு அடுத்ததாக மறுபடியும் தனுஷை வைத்து 2011 ஆம் ஆண்டு ஆடுகளம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.
தொடர்ந்து விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் ஒன்று, பாகம் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களையே பெறும். இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக உதயம் nh4, நான் ராஜாவாகப் போகிறேன், காக்கா முட்டை போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் வெற்றிமாறன்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட வெற்றிமாறன் ஜிவி பிரகாஷ் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒருநாள் ஜிவி பிரகாஷ் என்னிடம் வந்து எனக்கு இசையமைப்பது மிகவும் சலித்து விட்டது ஒரே ரூமில் அடைந்து இருப்பது போல் இருக்கிறது எனக்கு வெளியே வரவேண்டும் எல்லா விஷயங்களையும் பார்க்க வேண்டும் அதனால் நான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன் என்று என்னிடம் கூறினார். எல்லோரும் அவரிடம் நடிகராக வேண்டாம் என்று தான் அறிவுரை கூறினார்கள்.
எல்லோரையும் போலவே நானும் அவரிடம் நடிக்க வேண்டாம் இசையை நன்றாக செய்கிறீர்கள். அதே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூறினேன். ஆனால் நான் சொன்னது தவறு. அவர் நடிகராக ஆன பிறகு தான் அவருடைய இசையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. எந்த ஒரு காட்சியோ அல்லது படத்திற்கு என்ன தேவையோ அதை நடிகரான பிறகுதான் அவர் ஆழமாக புரிந்து கொண்டு அருமையாக இசையமைக்க தொடங்கிவிட்டார் என்று ரகசியத்தை உடைத்து பேசியிருக்கிறார் வெற்றிமாறன்.