தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் ஆளுங்கட்சியாக இருந்து தற்பொழுது சரிவை சந்தித்துள்ள திமுகவிற்கும், புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் விவாத போர் முற்றி வருகிறது. குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையான Gen Z இளைஞர்களை தங்களது பக்கம் ஈர்ப்பதற்காக திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், அவை ஒவ்வொன்றும் தவெகவினரால் மிக கடுமையாக கலாய்க்கப்பட்டு கேலி பொருளாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஜென் ஜி இளைஞர்களுக்கான கூட்டம் ஒன்றில், திமுக தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட ஒரு விசித்திரமான விளக்கம் தற்பொழுது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
திமுகவின் மிக முக்கிய மையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போதைய நவீன தலைமுறை இளைஞர்களை கொண்டு ஒரு பிரம்மாண்டமான கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் மேடையேறி பேசிய முக்கிய நபர் ஒருவர், அரங்கிலிருந்த இளைஞர்களை பார்த்து, “இது ஒன்றும் திமுகவின் அதிகாரப்பூர்வமான உட்கட்சி மீட்டிங் கிடையாது; அதேபோல் இது திமுக என்ற இயக்கம் முறைப்படி ஏற்பாடு செய்த கூட்டமும் கிடையாது” என்று பேசினார். அதுமட்டுமன்றி, “இதில் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டுள்ள இந்த ஜென் ஜி இளைஞர்கள் யாரும் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட கிடையாது” என்று அவர் மேடையிலேயே பகிரங்கமாக ஒரு விளக்கத்தை அளித்தார்.
இளைஞர்களை தங்களது கொள்கை வளையத்திற்குள் கொண்டு வருவதற்காக திட்டமிட்டு சொல்லப்பட்ட இந்த மழுப்பலான வார்த்தைகளை, தவெக-வின் தகவல் தொழில்நுட்ப அணியினர் அப்படியே கச்சிதமாக கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். “இது திமுக மீட்டிங்கும் இல்லை, அவங்க ஏற்பாடு செஞ்சதும் இல்லை, வந்தவங்க திமுக காரனும் இல்லைன்னா… அப்புறம் எதுக்குடா அந்த மீட்டிங்கை ஒட்டுமொத்த திமுகவோட தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்குள்ள நடத்துனீங்க?” என்று தவெக-வினர் தங்களது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிக் காரசாரமாகக் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.
திமுகவின் இந்த முரண்பாடான விளக்கத்தை கிண்டல் செய்யும் விதமாக, “உண்மையிலேயே அது கட்சி சாராத பொதுவான இளைஞர்களின் கூட்டம் என்றால், அதனைச் சென்னை மெரினா பீச்சிலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு பொது மைதானத்திலோ நடத்தியிருக்க வேண்டியதுதானே; அதை விடுத்து கட்சித் தலைமை அலுவலகத்திற்குள் கூட்டத்தை நடத்திவிட்டு, இது எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று நாடகம் ஆடுவது ஏன்?” என்று தவெக தொண்டர்கள் நெத்தியடியாக கேட்டு வருகின்றனர். காசு கொடுத்து இளைஞர்களை தங்களது அலுவலகத்திற்குள் வரவழைத்துவிட்டு, மக்கள் மத்தியில் தங்களுக்கு ஏதோ இளைஞர் பட்டாளமே திரண்டு நிற்பது போன்ற ஒரு போலி பிம்பத்தை காட்ட திமுக முயல்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்றைய ஜென் ஜி இளைஞர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எதார்த்தத்தை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்பதை திமுக இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை. வலுக்கட்டாயமாக ஆட்களை திரட்டி தங்களது பலத்தை காட்ட நினைக்கும் திமுகவின் இத்தகைய உத்திகள் அனைத்தும் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அசிங்கமாக அம்பலப்பட்டு போகின்றன.
தவெக-வின் பக்கம் தானாகவே முன்வந்து இணையும் லட்சக்கணக்கான உண்மையான ஜென் ஜி இளைஞர்களின் எழுச்சியை கண்டு பயந்துபோய்தான், திமுக இதுபோன்ற போலி கூட்டங்களை நடத்தி தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. அரசியல் செய்ய தெரியாமல், சொந்த மேடையிலேயே தங்களது பலவீனத்தை ஒப்புக் கொள்ளும் திமுகவினரை பார்க்கும்போது, தங்களுக்கு அவர்கள் அரசியல் எதிரியாக இருந்தாலும் கூட, மனிதநேய அடிப்படையில் ஒருவித பாவமாக இருக்கிறது என்று தவெகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது அரசியல் நையாண்டியை தொடர்ந்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
