தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன்னார்வ இளைஞர் குழுக்கள் நடத்தியுள்ள தற்போதைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. இந்த கணிப்புகளின்படி, அதிமுக கூட்டணி 110 முதல் 120 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பை அதிகம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு தயாராகி வரும் வேளையில், தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்குமா அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா என்ற விவாதம் வலுப்பெற்றுள்ளது.
அதேசமயம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த பொதுத்தேர்தலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை நிகழ்த்துவார் என்பது இந்தக் கணிப்புகள் மூலம் உறுதியாகியுள்ளது. தவெக சுமார் 60 முதல் 70 இடங்களை பிடித்துத் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது நடந்தால், முதல் தேர்தலிலேயே பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை விஜய் பெறுவார்.
ஆளும் கட்சியான திமுக இந்த கணிப்புகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. திமுக கூட்டணி 40 முதல் 50 இடங்களை மட்டுமே பெறும் என்ற கணிப்பு, ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை அப்பட்டமாக திரையிட்டு காட்டுகிறது.
தேர்தல் களத்தில் நிலவும் இந்த மும்முனை போட்டி, தமிழக வரலாற்றில் ஒரு புதிய ‘கூட்டணி ஆட்சிக்கு வித்திடப் போவதாகத் தன்னார்வ இளைஞர்களின் கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இறுதியாக, இந்த கணிப்புகள் மக்களின் தற்போதைய மனநிலையை பிரதிபலிப்பதாக அமைந்தாலும், உண்மையான தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
