துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை, ட்ரோன் போர் எல்லாம் முடிஞ்சிருச்சு.. இப்போ புதுவிதமான போர் தான் நடக்குது.. கத்தியின்றி ரத்தமின்றி வெடிகுண்டுகள் இன்றி ஒரு யுத்தம்.. ஒரே ஒரு வதந்தி கிளப்பிவிட்டால் போதும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே சாய்ச்சிடலாம்.. ஒரே ஒரு கும்பல் ஊடுருவினால் போதும், நாட்டின் மொத்த பாதுகாப்பும் குளோஸ்..!

தேசியப் பாதுகாப்பு என்பது எல்லைகளில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் வீரர்களோடு முடிந்துவிடும் ஒரு விஷயம் அல்ல; அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான பொறுப்பு என்பதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள்…

iran war 3

தேசியப் பாதுகாப்பு என்பது எல்லைகளில் துப்பாக்கி ஏந்தி நிற்கும் வீரர்களோடு முடிந்துவிடும் ஒரு விஷயம் அல்ல; அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான பொறுப்பு என்பதை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் அண்மையில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாகவே ஒரு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் அல்லது எல்லை ஊடுருவல் ஏற்படும் போது மட்டுமே மக்கள் பாதுகாப்பை பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், நவீன காலத்தில் போர்முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. தற்போது ‘ஹைப்ரிட் வார்ஃபேர்’ எனப்படும் கலப்புப் போர்முறை புழக்கத்திற்கு வந்துள்ளது.

இதில் ஆயுதங்களை காட்டிலும் தகவல்கள், பொருளாதாரம் மற்றும் ஒரு நாட்டின் உள்நாட்டு ஒருமைப்பாட்டை சிதைக்கும் நடவடிக்கைகள் மூலமே அதிக பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே, ராணுவம் மற்றும் புலனாய்வு அமைப்புகளை தாண்டி, சாமானிய மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

உள்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கியமான ஒரு சவாலாக தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் ‘போலி அடையாளங்களை உருவாக்குதல்’ போன்றவை உருவெடுத்துள்ளன. பல மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவல்கள் மூலம் போலி ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்கள் தயாரிக்கப்படுவது தேசிய பாதுகாப்பிற்கு விடப்படும் பெரும் சவாலாகும்.

உள்ளூர் அரசியலூக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இத்தகைய ஊடுருவல்களும், போலி அடையாளங்களும் சில சமயங்களில் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன. இத்தகைய போலி அடையாள அட்டைகளை கொண்டு தேச விரோத சக்திகள் நாட்டிற்குள் ஊடுருவவும், நிதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுப்பதில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் காவல் துறையினருக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

பிரிவினைவாத அரசியலும், மொழி அல்லது பிராந்திய ரீதியான பாகுபாடுகளும் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கானவை. ஒரு குடிமகன் தனது மொழி மற்றும் மாநிலத்தின் மீது பற்று கொண்டிருப்பது தவறல்ல; ஆனால் அது மற்ற மாநிலங்களை இழிவுபடுத்துவதாகவோ அல்லது தேசத்தின் ஒற்றுமையை பாதிப்பதாகவோ இருக்கக் கூடாது.

ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு பொறுப்பான குடிமகனாக செயல்படும்போது மட்டுமே முழுமையான பாதுகாப்பு சாத்தியமாகும். சாலையில் கிடக்கும் குப்பையை அப்புறப்படுத்துவதில் இருந்து, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடமாட்டத்தை கண்டால் காவல் துறைக்குத் தெரிவிப்பது வரை அனைத்துமே தேசப் பணியே. பாதுகாப்பு என்பது காவல் துறையின் வேலை மட்டும்” என்ற மனநிலை மாற வேண்டும். நாட்டின் பொருளாதாரம், ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றைக் காப்பதில் அரசியல் எல்லைகளைத் தாண்டி அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். விழிப்புணர்வுள்ள குடிமக்களே ஒரு தேசத்தின் உண்மையான பாதுகாப்பு அரண்கள்.