காங்கிரஸ், விஜய், கமல் கூட்டணி உருவாகிறதா? 2026 தேர்தலில் ராகுல் காந்தியின் மாஸ்டர் பிளான்..!

By Bala Siva

Published:

 

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மாஸ்டர் பிளான் வைத்திருப்பதாகவும் கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பிக்க ஐடியா கொடுத்ததே ராகுல் காந்தி தான் என்று கூறப்படும் நிலையில் விஜய் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் கமல் கட்சி இணையலாம் என்றும் அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் உட்பட சில கட்சிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நடிகர்கள் ஆரம்பித்த கட்சி அனைத்தும் கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்த நிலையில் விஜய் இவ்வளவு தைரியமாக கட்சி ஆரம்பித்துள்ளார் என்றால் அதற்கு மிகப் பெரிய பின்னணி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த பின்னணி தான் ராகுல் காந்தி என்றும் திமுக கூட்டணியில் நீடிக்க விரும்பாத ராகுல் காந்தி மாற்று ஏற்பாடாக விஜய், கமல் ஆகியோர்களுடன் இணைந்து தமிழகத்தில் திராவிட கட்சி இல்லாத ஒரு புதிய ஆட்சியை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் இந்த மாஸ்டர் பிளான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் எந்த அளவில் ஒர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்காக...