20 ஆண்டுகளில் 7 கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? நிதி ஆலோசகர்களின் அறிவுரை..!

Published:

மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கூட தன் வாழ்நாளில் ஒரு கோடி ரூபாயை எப்படியாவது சேர்த்து விட வேண்டும் என்ற இலக்கு பலருக்கு இருக்கும். அந்த வகையில் ஒரு கோடி என்ன, ஐந்து கோடி முதல் ஏழு கோடி வரை 20 ஆண்டுகளில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து நிதி ஆலோசகர்கள் கூறும் தகவலை பார்ப்போம்.

20 முதல் 25 வயது உடைய இளைஞர் ஒருவர் நல்ல வேலையில் இருக்கும் நிலையில் அவரால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும் என்றால் 20 ஆண்டுகளில் தாராளமாக அவர் 5 முதல் 7 கோடி ரூபாயை சேர்த்து விடுவார்.

அவரது இந்த  மாதம் ரூ.50,000 என்ற முதலீடு சராசரியாக ஆண்டுக்கு 12 முதல் 15 சதவீதம் வருமானம் கிடைத்தால் கூட ஐந்து கோடிக்கும் அதிகமாக அவருக்கு கிடைத்துவிடும் என்பதும் அவரது ஓய்வு காலத்தில் அந்த பணம் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால முதலீட்டில் 15 சதவீதத்துக்கு மேல் கூட வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 15 சதவீதம் கிடைத்தால் கூட 20 ஆண்டு முடிவில் 7.6 கோடி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் முதலீடு என்ற உடன் முதலீடு செய்பவர்கள் மிட் கேப்,  லார்ஜ் கேப், மல்டிகேப், ஃப்ளெக்ஸி கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் கலந்து முதலீடு செய்ய வேண்டும். மொத்தமாக ஒரே பிரிவில் முதலில் செய்யாமல் ஐம்பதாயிரம் ரூபாயை பத்தாயிரம் ரூபாய் என ஐந்து ஆக பிரித்து மேற்கண்ட 5 பண்டுகளில் முதலீடு செய்தால் 15 முதல் 20 சதவீதம் கூட வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் 20 ஆண்டு காலத்தில் நம்முடைய 1.2 கோடி ரூபாய், 7  கோடிக்கும் அதிகமாக வர வாய்ப்பு இருப்பதாகவும் நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...