இந்தியாவுடன் ஏற்பட்ட சமீபத்திய இராணுவ மோதலில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்த நிலையில், அதன் நட்பு நாடான சீனா, பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு புதியதாக 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை ஒப்புதலளித்துள்ளது. இந்த நிதியை பாகிஸ்தான், சீனாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை வாங்க பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவின் Z-10ME எனும் தாக்குதல் ஹெலிகாப்டர் பாகிஸ்தானிலேயே உருவாக்கி தரப்படும். மேலும் அதில் துருக்கியில் தயாரிக்கப்படும் முன்னேற்றமடைந்த ஆயுதங்களும் பொருத்தப்பட உள்ளன.
முன்னதாக, பாகிஸ்தான் அமெரிக்காவின் AH-1Z ஹெலிகாப்டர்கள் மற்றும் துருக்கியின் T129 ATAK ஹெலிகாப்டர்களை வாங்க முயன்றது. ஆனால் அது சில காரணங்களால் முடியவில்லை.
இந்தியாவின் LCH ‘பிரச்சண்ட்’ ஹெலிகாப்டருக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ள Z-10ME, PLA-வின் ஆயுத சேமிப்பகங்களில் மிக ஆபத்தான தாக்குதல் ஹெலிகாப்டராக கருதப்படுகிறது. தற்காப்பு தயாரிப்பில் தன்னிறைவை அதிகரிக்க, பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து இதனை உற்பத்தி செய்ய உள்ளன.
Z-10ME ஹெலிகாப்டரில், துருக்கியின் உல்தாச் எனப்படும் 8 கிமீ தூரத்தில் தாக்கும் “ஃபயர் அண்ட் புகெட்” வகை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்பட உள்ளது. அதோடு, துருக்கி தயாரித்த லேசர் வழிகாட்டும் ராக்கெட்டுகள், முன்னேற்றமடைந்த நவிகேஷன் மற்றும் சென்சார்கள் ஆகியவை Z-10ME-யில் இணைக்கப்பட உள்ளன.
Z-10ME ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான், பலுசிஸ்தான் மற்றும் கெய்பர் பக்துன்வா பகுதிகளில் பயங்கரவாத விரோத நடவடிக்கைகளில் மற்றும் இந்திய எல்லையோர கண்காணிப்புகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
Z-10ME-க்கு இந்தியாவின் பதில் தான் ‘பிரச்சண்ட்’ எனப்படும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘லைட் காம்பட் ஹெலிகாப்டர்’ (LCH). இந்த ஹெலிகாப்டரை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (HAL) உருவாக்கியுள்ளது. இது உயரமான பனிக்கொழும்பு மற்றும் மலைப் பகுதி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானது.
2023-ஆம் ஆண்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் HAL-க்கு 6.1 பில்லியன் டாலருக்கு 156 பிரச்சண்ட் ஹெலிகாப்டர்களுக்கான உத்தரவை வழங்கியது. நைஜீரியா, அர்ஜென்டினா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்த ஹெலிகாப்டரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.