அட பாவிகளா! பறவைகளையும் கெடுத்துட்டிங்களே.. ஃபைபர் கேபிளில் கூடு கட்டிய குருவிகள்..! 3 வருட ரஷ்ய – உக்ரைன் போரின் விளைவு..!

  கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் இப்போதைக்கு முடியாது என்று தெரிகிறது. கடந்த ஞாயிறு அன்று, ரஷ்யா மீது மூர்க்கத்தனமாக உக்ரைன் தாக்குதல்…

nest

 

கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போர் இப்போதைக்கு முடியாது என்று தெரிகிறது. கடந்த ஞாயிறு அன்று, ரஷ்யா மீது மூர்க்கத்தனமாக உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ரஷ்யா தனது பங்கிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. எனவே, இன்னும் இந்த போர் நீடிக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில், போரின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு பயணம் செய்துள்ளது. இந்த குழுவினர் கண்ட ஒரு காட்சி தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக குருவிகள் உட்பட பறவைகள் தங்களது கூண்டுகளை மரத்தில், மரத்தின் கிளைகள், வேர்கள், இலைகள் ஆகிவற்றை வைத்து தான் கட்டுகின்றன. ஆனால், அவர்கள் பார்த்த காட்சியில், போரில் பயன்படுத்தப்பட்டிருந்த ஃபைபர் ஆப்டிகல் கேபிளில் பறவைகள் கூடு கட்டியிருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில், ரஷ்யா மற்றும் உக்ரைன் மாறி மாறி பயன்படுத்திய ஆயுதங்களிலிருந்து பைபர் கேபிள் ஏராளமாக குப்பைகளாக கிடந்துள்ளன. அதிலிருந்து சிலவற்றை எடுத்து, இந்த பறவைகள் தாங்கள் தங்குவதற்கான கூடுகளை அமைத்துள்ளன. இவை பார்ப்பதற்கு, அசல் மரம் மற்றும் இலைகளால் கட்டிய கூடு போலவே இருக்கிறது.

இதைக் கண்ட அவர்கள் அதிசயப்பட்டனர். இந்தக் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “அட பாவிகளா! பறவைகளையும் பைபர் கேபிளை பயன்படுத்தும் வகையில் கெடுத்து விட்டீர்களே” என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.