வச்சான் பாரு ஆப்பு.. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமலேயே 90 நாட்கள் சிறை.. பலுசிஸ்தான் சட்டத்தால் பாகிஸ்தான் அதிர்ச்சி..!

  பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்துவிட்டதாக தனக்குத்தானே அறிவித்து கொண்ட பலுசிஸ்தான் தற்போது புதிய சட்டமன்றம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பில் உள்ளவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்…

Balochistan

 

பாகிஸ்தானில் இருந்து தனிநாடாக பிரிந்துவிட்டதாக தனக்குத்தானே அறிவித்து கொண்ட பலுசிஸ்தான் தற்போது புதிய சட்டமன்றம் இயற்றியுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தானை சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பில் உள்ளவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமலேயே கைது செய்து, சிறையில் 90 நாட்கள் வரை அடைக்கலாம் என்று கூறப்பட்டு இருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் பலுசிஸ்தான் இந்தியாவின் சிந்தூர் தாக்குதலின்போது திடீரென தனிநாடாக அறிவித்தது. மேலும், தங்கள் நாட்டிற்கு என சட்ட திட்டங்கள் வகுக்கப் போவதாகவும், காவல்துறை நீதிமன்றங்களையும் ஏற்படுத்தப் போவதாகவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜூன் நான்காம் தேதி, பலுசிஸ்தான் சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் படி, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உள்ளிட்ட ராணுவ உளவுத்துறை அமைப்புகள், பலுசிஸ்தான் வந்தால், அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமலேயே 90 நாட்கள் வரை சிறை வைக்க அனுமதிக்கிறது. வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் இதை செய்யலாம் என்றும், நீதிமன்ற ஒப்புதல் தேவை இல்லை என்றும் இந்த சட்டம் கூறுகிறது.

இந்த புதிய சட்டத்திற்கு மனித உரிமை அமைப்புகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. இந்த சட்டம் அடக்குமுறையையும் குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

நீதிமன்ற அனுமதி இன்றி 90 நாட்கள் சிறையில் வைக்கலாம் என்ற இந்த சட்டத்தை பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானில் இருந்து வரும் உளவாளிகளை கட்டுப்படுத்த இந்த சட்டம் தேவை என, பலுசிஸ்தான் கூறி வருகிறது.

இது குறித்து இந்தியாவில் உள்ள நெட்டிசன்கள், “பாகிஸ்தானுக்கு வச்சான் பாரு ஆப்பு” என பலுசிஸ்தான் சட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.