தோல்வி நிலையென நினைத்தால்.. சொந்த தொழிலை மூடிவிட்டு வேலை தேடியவருக்கு கிடைத்த கசப்பான அனுபவம்..!

  சொந்தமாக ஸ்டார்ட்-அப் தொழில் ஒன்றை தொடங்கி, சந்தர்ப்பவசம் காரணமாக அந்த தொழிலை நடத்த முடியாமல் மூடிவிட்டு, அதன் பின் வேலை தேடிய ஒரு இளைஞர் ஒருவருக்கு கசப்பான அனுபவம் நேர்ந்ததை, ரெடிட் தளத்தில்…

job

 

சொந்தமாக ஸ்டார்ட்-அப் தொழில் ஒன்றை தொடங்கி, சந்தர்ப்பவசம் காரணமாக அந்த தொழிலை நடத்த முடியாமல் மூடிவிட்டு, அதன் பின் வேலை தேடிய ஒரு இளைஞர் ஒருவருக்கு கசப்பான அனுபவம் நேர்ந்ததை, ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

“நான் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக சில ஆண்டுகள் நடத்தி வந்தேன். என்னுடைய இரண்டு நண்பர்களுடன் தொடங்கிய அந்த ஹெல்த் பேஸ்டு ஸ்டார்ட்-அப் நிறுவனம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென நாங்கள் பணச் சிக்கலை சந்தித்தோம்.

அப்போது எங்களால் பணத்தை புரட்ட முடியாததால், என்னுடைய இரண்டு நண்பர்களும் நிறுவனத்திலிருந்து விலகினார்கள். அதன் பிறகு, நான் அந்த நிறுவனத்தை மூட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன்.

அதன் பிறகு மீண்டும் வேலை தேடும் போதுதான், வேலை தேடுவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு புரிந்தது. அனைத்து இன்டர்வியூக்களிலும், ‘நீங்கள் ஓவர் குவாலிபைடாக இருக்கிறீர்கள்’, ‘ஒரு நிறுவனத்தை நடத்திய முதலாளியாக இருந்து நீங்கள் எப்படி ஒரு சாதாரண வேலை செய்வீர்கள்?’ என்ற கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டார்கள்.

அந்த நேரம் எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘உங்கள் பின்னணி எங்கள் நிறுவனத்தின் வேலைக்கு பொருந்தாது, உங்களுக்கு நாங்கள் வேலை கொடுக்க முடியாது’ என்றுதான் பல நிறுவனங்களில் இன்டர்வியு செய்தபோது பதிலாக வந்தது.

‘ஏன், ஒரு தொழிலை செய்து விட்டால், அதை மூடிய பிறகு என்னால் வேலையை செய்ய முடியாதா?’ என்ற என் விளக்கத்தை யாருமே ஏற்கவில்லை. இப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை என புலம்புகிறார்.

இதற்கு அவருக்கு பலர் ஆறுதல் அளித்து வருகின்றனர். “நானும் சில ஆண்டுகளுக்கு முன் என் நிறுவனத்தை மூடிவிட்டு வேலை தேடும் போது இதே போன்ற சிரமத்தை எதிர்கொண்டேன். உங்களுக்கு வேறு வேலை அனுபவம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக வேலை கிடைக்கும்,” என்று கூறி வருகின்றனர்.

“ஒரு நிறுவனத்தை நடத்தி விட்டு தோல்வியடைந்த ஒருவரால் மீண்டும் வேலை செய்ய முடியாது என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், அதை முறியடித்து முன்னுக்கு வாருங்கள்,” என்று ஒருவர் ஆறுதல் கூறியிருந்தார்.

“நானும் இதே நிலைமையில்தான் ஒரு காலத்தில் இருந்தேன். எந்த நிறுவனமும் எனக்கு வேலை கொடுக்கவில்லை. தற்போது சில ஃப்ரீலேன்ஸ் வேலைகளை பார்த்து வருகிறேன். நீங்களும் அதே போல் செய்யலாம்,” என்று கூறினார் இன்னொருவர்.

“முடிந்தால், இன்னொரு முறை முயற்சி செய்து உங்கள் தொழிலை மீண்டும் தொடங்க முடியுமா என்று பாருங்கள்,” என்று ஒருவர் தெரிவித்திருந்தார்.

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா” கண்டிப்பாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு, மனதை தளரவிட வேண்டாம் என இன்னொருவர் பதிவு செய்திருந்தார்.