சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை தொடர்ந்து, அமெரிக்காவின் உலகளாவிய அபாய மதிப்பீட்டு அறிக்கையில், பாகிஸ்தான் தனது அணுஆயுதங்களை நவீனமயமாக்குவதை முன்னுரிமையாக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பாகிஸ்தான் அபாயமாக பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்தியாவை பாகிஸ்தான் ஒரு அபாயமாகவே பார்க்கிறது. இந்தியாவின் பாரம்பரிய ராணுவ பலத்தை சமன்படுத்த, போர்க்கள அணுகுண்டுகள் உள்ளிட்ட ராணுவ நவீனமயமாக்கலை பாகிஸ்தான் தொடரும்” என அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியா கடுமையாக எதிர்த்த போதிலும், மே 9ம் தேதி ஐ.எம்.எப்.–இனிருந்து பாகிஸ்தான், $1 பில்லியன் நிதியுதவியை பெற்றது. 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தனது அணுகுண்டுகளை பராமரிக்க மட்டும் $1 பில்லியன் செலவிட்டதாக ICAN அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாகிஸ்தான், அணுஆயுதங்களை நவீனமயமாக்கி வரும் நிலையில், அவற்றின் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் உறுதி செய்கிறது. மேலும், வெளிநாட்டு விற்பனையாளர்கள் மூலம் WMD (அழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள்) சம்பந்தமான பொருட்களை வாங்குவதும் அவசியம் நடக்கிறது” என அமெரிக்கா கூறுகிறது.
பாகிஸ்தானின் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்பு சீனாவுடன் நெருக்கமாக உள்ளது. அழிவு ஆயுத திட்டங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை சீனா வழங்குகிறது. அவை ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேடுகள் வழியாக கொண்டு வரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன-பாகிஸ்தான் பொருளாதார திட்டங்களில் பணியாற்றிய சீனர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இரு நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் ஏழு சீனர்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் தலிபான்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 2024 செப்டம்பரில், எட்டு தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 2025 மார்சில் இருநாடுகளும் தற்கொலை தாக்குதல்களுக்கு பதிலடியாக எல்லையை வான்வழி, நிலைதடி பிரதேசங்களில் தாக்கியுள்ளன.
மோடி தலைமையில் இந்தியா, உலகளாவிய பாதுகாப்பு தலைவர் என தன்னை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறது. சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள், மற்றும் ராணுவ மேம்பாடுகள் இவரின் முக்கிய நோக்கங்களாக உள்ளன” என அறிக்கை கூறுகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த மே மாதம் ஒருவரையொருவர் தாக்கிய குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ‘ஆபரேஷசிந்தூர்’ என்ற செயல் திட்டத்தில், இந்தியா பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கும் எதிராக வலிமையான தாக்குதல்கள் நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
‘Make in India’ முயற்சி, இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது ராணுவ நவீனமயமாக்கலையும் நோக்குகிறது. 2024இல், இந்தியா அணுஆயுதத் திறன் கொண்ட அக்னி–1 பிரைம் மற்றும் அக்னி–5 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
ரஷ்யாவுடன் இந்தியாவின் உறவு தொடரும் என்றும், ரஷ்ய ராணுவ உபகரணங்களை இந்தியா இன்னும் பெரிதும் நம்பி செயல்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மொத்தத்தில் இந்த அறிக்கையில் இருந்து தெரிய வருவது என்னவெனில் பாகிஸ்தான் என்னதான் பில்லியன் கணக்கான டாலர்களை ராணுவம், அணு ஆயுதத்திற்கு செலவு செய்தாலும், இந்தியாவை தோற்கடிக்க முடியாது, அதற்கு பதில் அந்த பணத்தை பாகிஸ்தான் நாட்டு மக்களின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதுதான் உள்ளர்த்தமாக உள்ளது.