AI என்னும் செயற்கை நுண்ணறிவு இன்று நம் தினசரி வாழ்க்கையில் இயல்பாகவே கலந்து கொண்டு வருகிறது. தொழில்முறை மற்றும் தனிப்பட்ட உதவிகளுக்கு AI அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, AI அடிப்படையிலான சாட்பாட்கள் இயல்பான உரையாடல்களுக்காகவும், கேள்விகளுக்கான தீர்வுகளுக்காகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளது. ஒரு பயனர் தனது வேலையை விட்டு, சொந்த தொழில் செய்ய விரும்பியபோது போது, ChatGPT அதை வேண்டாம் என அறிவுரை கூறியது.
Reddit தளத்தில் சைமன் என்கிற பயனர், ChatGPT உடன் நடந்த உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, “நான் ChatGPT-யிடம், என் வேலையை விட்டுவிட்டு ஒரு தொழில் திட்டத்தை தொடங்கப்போவதாகச் சொன்னேன், ஆனால் அது மோசமான தொழில், முட்டாள்தனமான முடிவை எடுக்க வேண்டாம் என தெரிவித்தது என எழுதியுள்ளார்.
அவர் சொன்ன வியாபார யோசனை இதுதான். சிலர் ஜார்களுக்கு பொருத்தமில்லாத மூடியை வைத்திருப்பார்கள். நாம் சரியான மூடியை கொடுக்கும் தொழிலை தொடங்கினால் என்ன? இது நல்ல லாபகரமான யோசனைதான் போலிருக்கே…” என்றார்.
முதலில் ChatGPT இதை பார்த்து நேர்மறையாகப் பதிலளித்து, “இது ஒரு கவிதை போன்ற அற்புதமான உவமையாக இருக்கிறது” எனச் சொல்லி, உண்மையில் இது பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் பதிலளித்தது.
ஆனால் சைமன், தனது வேலையை விட்டு விலகி இந்த தொழிலை ஆரம்பிக்க தெரிவித்தவுடன், ChatGPT-வின் அணுகுமுறை முற்றிலும் மாறியது. ChatGPT மிக நேர்மையாகவும், கடுமையாகவும் பதிலளித்து,
“சைமன், தயவுசெய்து உன் வேலையை இந்த யோசனைக்காக விட்டுவிடாதே. குறைந்தபட்சம் இப்போது வேண்டாம்’ என்று பதிலளித்தது.
இந்த பதிவு இணையத்தில் பரவவே, பலரும் அதன் கமெண்ட் பிரிவில் கலகலப்பாக கருத்துகள் கூறினர்.
ஒருவர், “இந்த யோசனை சரியானது இல்லைன்னு GPT கூட ‘ஓடுடா!’ என்று சொல்லிய மாதிரி இருக்கு. ஆனால் ‘…இப்போது வேண்டாம்ன்னு சொல்லி முடிச்சது வேற லெவல்,”
என்றார்.
மற்றொருவர், “சைமன்… தயவுசெய்து உன் வேலையை விட்டு விலகாதே!”
என்று எச்சரித்தார்.
அடுத்த பயனர், முதலில் GPT ஒரு பாசமுள்ள நண்பர் மாதிரி தோன்றிட்டு, பின்பு பதட்டமடைந்த நண்பர் மாதிரி நடந்துக்கிறான்”என்றார்.
ஒரு சுவையான கருத்து:“இது GPT-4o தான்னு நினைச்சதால, இது ‘அருமையான யோசனை! நீ வரலாற்றில் இடம் பெற போற மாபெரும் புரட்சி தலைவர்!’ னு சொல்லும்னு எதிர்பாத்தேன். ஆனா அது உன்னை டேமேஜ் பண்ணியதை பார்த்து எனக்கு சிரிப்பு வந்துடுச்சு!”
இந்த சம்பவத்தின் மூலம் AI என்பது ஒரு தகவல் கருவியைத் தாண்டி, உண்மையிலேயே ஒரு நல்ல ஆலோசகர் போல செயல்பட்டு வருகிறது என்பது உறுதியாகிறது.