Manhole மூடியை கூட இந்தியாவில் இருந்து வாங்க வேண்டுமா? அமெரிக்க நெட்டிசன்கள் ஆவேசம்..!

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Manhole கவரின் படம், தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர், “சியாட்டில் நகரம் ஏன் இந்தியாவிலிருந்து Manhole கவர்கள் வாங்குகிறது?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.…

manhole

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Manhole கவரின் படம், தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர், “சியாட்டில் நகரம் ஏன் இந்தியாவிலிருந்து Manhole கவர்கள் வாங்குகிறது?” என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

ஒருவர் “X” பக்கத்தில் படம் பகிர்ந்து, “சியாட்டில் நகரம் Manhole கவர்களை இந்தியாவில் இருந்து ஏன் வாங்குகிறது?” என கேட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்த நெட்டிசன்களில் சிலர், “உலகம் முழுவதும் காச்ட் அயர்ன் (cast iron) பொருட்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்துதான் வருகிறது” என கூற, மற்றொருவர் “இந்தியாவில் உற்பத்தி செலவு குறைவாக இருக்கிறது” என விளக்கினார்.

இந்தியா, அமெரிக்காவை விட 6 மடங்கு அதிகமான இரும்புத் தாதுவை, பாதி செலவில் உற்பத்தி செய்கிறது. இதனால், இந்தியா Manhole கவர்களை வழங்கும் வகையில் போட்டித் திறன் பெற்றுள்ளது. இதனால் அமெரிக்கர்கள், உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள், ஆயுதங்கள் உருவாக்கத்தை கவனிக்கலாம்; Manhole கவர்களை போன்ற சாதாரண விஷயங்களை இந்தியா கவனிக்கட்டும்.”

“பல்வேறு நாடுகளில் காச்ட் அயர்ன் இந்தியாவில் இருந்துதான் வருகிறது; இதுபோன்று பல ஆண்டுகளாக நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

“இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுச்சூழல் விஷயங்களை கடைப்பிடிப்பது குறைவாக இருக்கலாம். ஏனெனில் இரும்பை உருக்க டன்களுக்கு டன்கள் நிலக்கரி தேவைப்படும். அமெரிக்காவிலும் முடியும், ஆனால் இது குறைவாகவே நடக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் பல நகரங்களில் குறிப்பாக நியூயார்க், சாக்ரமென்டோ, சியாட்டில் ஆகியவற்றில் “Made in India” என குறிக்கப்பட்ட Manhole கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வரும் நடைமுறை.

மேற்கு வங்காளத்தில் ஹவுரா மற்றும் தாஸ்நகர் பகுதிகளில் உள்ள பல எஃகு உற்பத்தி நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு Manhole கவர்கள், கழிவுநீர் மூடிகள் மற்றும் வால்வ் பாக்ஸ்கள் போன்ற நகராட்சி உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

இந்திய தொழிலாளர்கள் குறைந்த கூலி, அரசின் மானியங்கள் மற்றும் உற்பத்தி திறனை வைத்திருப்பதால், இந்திய கம்பனிகள், அமெரிக்க உற்பத்தியாளர்களைவிட 20% முதல் 60% குறைந்த விலையில் வழங்குகிறார்கள் என பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.