மேனேஜரை திட்டி நண்பருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜ்.. தவறுதலாக ஆபீஸ் குரூப்பில் அனுப்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி..!

ஒரு பெண் தனது நண்பரிடம் தனது அலுவலக மேலாளரை பற்றி திட்டி அனுப்பிய மெசேஜை, தவறுதலாக அலுவலக வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிவிட்டதால் தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை குறித்து ரெடிட் சமூக வலைத்தளத்தில் ஒரு…

office

ஒரு பெண் தனது நண்பரிடம் தனது அலுவலக மேலாளரை பற்றி திட்டி அனுப்பிய மெசேஜை, தவறுதலாக அலுவலக வாட்ஸ்அப் குழுவில் அனுப்பிவிட்டதால் தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை குறித்து ரெடிட் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“ஒரு சின்ன மிஸ்டேக் செய்தால் அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்பதை நான் புரிந்து கொண்ட நிகழ்வுதான் அது,” என்று அந்தப் பெண் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். “என் நண்பர் ஒருவர் அலுவலக மேனேஜர் எப்படி இருக்கிறார் என்று கேட்டபோது, அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பினேன். ஆனால், அந்த மெசேஜை நான் தவறுதலாக நண்பருக்கு அனுப்புவதற்கு பதிலாக, ஆபீஸ் குரூப்பில் அனுப்பிவிட்டேன். அதன் பிறகுதான் என்னுடைய தவறு தெரிந்தது.”

அலுவலகக் குழுவில் எப்போதும் கலகலப்பாகவும், மகிழ்ச்சியான எமோஜிகளுடனும் பதிலளிக்கும் நண்பர்கள் அனைவரும் அப்படியே அமைதியாகிவிட்டனர். ஒருவர்கூட சில நிமிடங்கள் பதிலளிக்காமல் இருந்தார்கள். “அப்போதுதான் என்னுடைய தவறு தெரிந்தது. உடனே நான் ஹெச்.ஆர்.ஆல் வரவழைக்கப்பட்டு, ஆபீஸிலிருந்து விரட்டப்படுவேன் என்றுதான் நினைத்தேன்.

மறுநாள் ஆபீசுக்கு சென்றபோது, அனைவரும் தன்னை ஒரு மாதிரியாக பார்த்ததாகவும், நிலைமைகள் அப்படியே மாறி இருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார். “தன்னிடம் சாதாரணமாக பேசி கொண்டிருந்த மேனேஜர் திடீரென பேச்சை நிறுத்திவிட்டார். என்னுடைய பெயரை சொல்லி கூப்பிடுவது கூட இல்லை. எனக்கு ஏதேனும் வேலை கொடுக்க வேண்டும் என்றால் கூட, மற்றவர்கள் மூலம் வேலையை கொடுத்தார். அவர் என்னிடம் சண்டை போடவில்லை, ‘ஏன் இப்படித் திட்டினாய்’ என்று என்னிடம் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், அவர் ஒரு ஆக்ரோஷமான அமைதிக்கு மாறிவிட்டார்.”

“நான் இப்போது எல்லாம் அலுவலக சம்பந்தப்பட்ட மெசேஜை அனுப்பும்போதும் கூட, ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து அனுப்புகிறேன். ஏனென்றால், ஒரு சின்ன தவறான மெசேஜால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தப்பதிவுக்கு ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். “உங்கள் மேலாளர் உண்மை நிலையை உணர்ந்து தொழில் ரீதியாக நடந்து கொண்டுள்ளார். நீங்கள் ஒரு வருத்தத்தை மேலாளரிடம் தெரிவித்திருக்கலாம்,” என்று சிலர் கூறினர்.

“நான் உங்கள் மேலாளராக இருந்தால், நீங்கள் என்னை இவ்வளவு ஆக்ரோஷமாக திட்டும் அளவுக்கு என் மேல் என்ன குறை என்று பொறுமையாக உங்களிடம் விளக்கம் கேட்டிருப்பேன்,” என்று ஒருவர் பதிவிட்டார். இதேபோன்று எனக்கும் சில அனுபவங்கள் இருந்தன என்று பலரும் தங்களுடைய கதைகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.