விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்லவன்.. திருச்சிற்றம்பலம்.. 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம்!

Published:

புதுடெல்லி : 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணிரத்னம் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி சூப்பர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. மேலும் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் என 6 தேசிய விருதுகளை கோலிவுட் தட்டித் தூக்கியுள்ளது.

அதேபோல் சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி தேசிய விருதைப் பெறுகிறார். குலதெய்வப் பெருமையைக் கூறிய காந்தாரா திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 1 திரைப்படமானது சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு என 4 பிரிவுகளில் தேசிய விருதினைப் பெறுகிறது. ஒட்டுமொத்த சிறந்த திரைப்படமாக மலையாளப் படமான ஆட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் யாரும் எதிர்பாரா வகையில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிக்கைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே பிலிம்பேர் விருது பெற்றுள்ள நிலையில் தற்போது தேசிய விருதும் அவரை அலங்கரித்திருக்கிறது. கட்ச் எக்ஸ்பிரஸ் என்ற குஜராத்தி மொழி படத்தில் நடித்த நடிகை மானசி பரேக் என்பவருடன் நித்யாமேனன் தேசிய விருதினைப் பகிர்ந்து கொள்கிறார். இதுமட்டுமன்றி திருச்சிற்றம்பலம் படம் சிறந்த நடனத்துக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.

25 டியூன் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. உருகிப் போன எஸ்.ஜே.சூர்யா.. உருவான சூப்பர்ஹிட் அம்மா பாடல்

விருது விபரங்கள் :
சிறந்த தமிழ்த் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1
சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த ஒலிப்பதிவு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (பொன்னியின் செல்வன் 1)
சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) & மானசி பரேக் (கட்ச் எக்ஸ்பிரஸ்)
சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா) விக்ராந்த் மாசே (12th பெயில்)
சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (மேகம் கருக்காதா.. திருச்சிற்றம்பலம்)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா
சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – அன்பறிவ் (காந்தாரா)
சிறந்த இந்தித்திரைப்படம் – குல்மோஹர்
சிறந்த தெலுங்குப் படம்- கார்த்திகேயா 2
சிறந்த கன்னடப் படம் – கே.ஜி.எப் 2
சிறந்த மலையாளப் படம் – சவுதி வெள்ளைக்கா
சிறந்த திரைக்கதை – ஆனந்த் ஏகார்ஷி
சிறந்த பின்னணிப் பாடகி – பாம்பே ஜெய ஸ்ரீ (சவுதி வெள்ளைக்கா)
சிறந்த பின்னணிப் பாடகர் – ஆர்ஜித் சிங் (பிர்ம்மாஸ்திரா-இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஸ்ரீபத் (மாளிகாவுரம்- மலையாளம்)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் – சோம்நாத் குண்டு (அபராஜிதோ- வங்க மொழி)

மேலும் உங்களுக்காக...