25 டியூன் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. உருகிப் போன எஸ்.ஜே.சூர்யா.. உருவான சூப்பர்ஹிட் அம்மா பாடல்

Published:

தமிழ் சினிமாவில் சென்டிமெண்ட்டுக்கு எப்பவுமே தனி மவுசு உண்டு. அதிலும் குறிப்பாக அம்மா சென்டிமெண்ட், தங்கச்சி சென்டிமெண்ட் இருந்தால் அந்தப் படம் கதை சரியில்லை என்றாலும் ஓடிவிடும். இப்படி ஓடிய படங்கள் ஏராளம். தற்போது நடிப்பு அரக்கன் என்று சினிமா ரசிகர்களால் புகழப்படும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வாலி, குஷி படங்களுக்குப் பிறகு தானே நடித்து இயக்கிய படம் தான் நியூ.

எஸ்.ஜே.சூர்யாவுடன், சிம்ரன்,தேவயாணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். தனது முதல் இரு படங்களுக்கும் தேவா இசையில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா நியூ படத்தில் முதன் முதலாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்தார்.

இவர்கள் காம்போவில் வந்த நியூ, அன்பே ஆருயிரே ஆகிய இரண்டு பட ஆல்பங்களும் சூப்பர் வெரைட்டி ரகம். அதிலும் குறிப்பாக நியூ படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் எஸ்.ஜே. சூர்யா நிறைய சீன்களைக் கூறினாராம். அதன்படி ஏ.ஆர்.ரஹ்மான் நியூ படத்திற்காக கிட்டத்தட்ட 25 டியூன்களைக் கொடுத்திருக்கிறார். அதில் ஒரே ஒரு டியூன் மட்டும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போக உருவானது தான் காலையில் தினமும் பாடல்.

ஆந்திராவையும் விட்டு வைக்காத அம்மா உணவகம் திட்டம்.. அண்ணா கேண்டீன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்

தமிழ்த் திரையுலகில் அதற்குமுன் அம்மா பாடல் என்றாலே மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத பாடல் மட்டுமே எங்கும் ஒலிபரப்பாகியது. இந்த பாடல் வந்தவுடன் 2கே கிட்ஸ்களும் காலையில் தினமும் கண் விழித்தால் நாம் கை தொழும் தேவதை அம்மா .. என்ற பாடலை கேட்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் அடுத்த அம்மா பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மேலும் நியூ படத்தின் கதையானது எஸ்.ஜே.சூர்யா ஒரு ஹாலிவுட் படத்தின் கதையின் கருவை எடுத்து தனது பாணியில் ரசிகர்களுக்குக் கொடுத்தார். இப்படமும் வெற்றி பெற்று எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை பக்க பலமாக அமைந்தது. மேற்கண்ட இரண்டு அம்மா பாடல்களையுமே வாலி இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...