காத்திருந்த பொறுமைக்குக் கிடைத்த பலன்.. 9 விருதுகளை அள்ளிய ஆடு ஜீவிதம் : கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Published:

70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல் வெளியான சூழலில் சிறந்த மலையாளத் திரைப்படமாக சவுதி வெள்ளைக்கா தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3 தேசிய விருதுகளும் மலையாளத் திரையுலகிற்குக் கிடைத்திருக்கிறது.

இந்த குஷி அடங்குவதற்குள் அடுத்த இனிப்பான செய்தியாக கேரள திரைத்துறைக்கு கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆடு ஜீவிதம் திரைப்படம் ஏமாற்றம் அளிக்காமல் 9 மாநில விருதுகளைக் குவித்துள்ளது.

இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்தது தான் ஆடு ஜீவிதம் (தி கோட் ஃலைப்) திரைப்படம். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படம் போன்று பாலைவனத்தில் சிக்கிய ஒருவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் பல்வேறு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. பான் இந்தியா படமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நாயகனாக பிருத்விராஜ் நடித்திருந்தார். நாயகியாக அமலா பால் நடித்திருந்தார்.

விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்லவன்.. திருச்சிற்றம்பலம்.. 70-வது தேசிய திரைப்பட விருதுகள் விபரம்

இப்படம் நிறைய விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பொய்யாக்காமல் 9 மாநில விருதுகளைப் பெற்றுள்ளது. கேரள மாநில கலாச்சாரத்துறை வெளியிட்டுள்ள விருதுகள் விபரம் :

சிறந்த நடிகர் – பிருத்வி ராஜ் (ஆடு ஜீவிதம்)
சிறந்த நடிகை – ஊர்வசி (உள்ளொழுக்கு), பீனா ஆர் சந்திரன் (தடவு)
சிறந்த இயக்கம் – பிளஸ்ஸி (ஆடு ஜீவிதம்)
சிறந்த படம் – காதல் தி கோர்
சிறந்த ‘பிரபலமான திரைப்படம் – ஆடுஜீவிதம்
சிறந்த படம் (2-ம் இடம்) – இரட்டா
சிறந்த அறிமுக இயக்குனர் – பாசில் ரசாக் (தடவு)
சிறந்த சவுண்ட் டிசைன் – ஜெயதேவன் சக்கடத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)
சிறந்த ஜுரி விருது நடிகர் – சுதி கொழிகோட் (காதல்), கே.ஆர். கோகுல் (ஆடு ஜீவிதம்),
சிறப்பு விருது – ககனாச்சாரி
சிறந்த பெண் திருநர் சமூகத்துக்கான விருது – இயக்குநர் ஷாலினனி உஷா தேவி (என்னென்னும்)
சிறந்த VFX – ஆண்ட்ரூ டி க்ரூஸ், விஷக் பாபு (2018)
சிறந்த நடன இயக்குநர் – ஜிஷ்னு (சுலேகா மன்ஸில்)
சிறந்த பின்னணி குரல் (பெண்) – சுமங்கலா – ஜனனம் 1947, ப்ரணயம் தொடருன்னு

மேலும் உங்களுக்காக...