கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகே உள்ளே மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் கலா என்ற 30 வயது பெண், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா அப்பகுதியைச் சார்ந்தவர் ஜோயி அலெக்ஸ் என்ற குடும்ப நண்பர்…

கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகே உள்ளே மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் கலா என்ற 30 வயது பெண், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

கலா அப்பகுதியைச் சார்ந்தவர் ஜோயி அலெக்ஸ் என்ற குடும்ப நண்பர் ஒருவருக்கு 3 கோடி கடன் கொடுத்துள்ளார். ஜோயி அலெக்ஸ் கடனை திருப்பி கொடுத்துவிடுவதாகக் கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் கூறி வருகிறார், ஆனால் கொடுத்த பாடில்லை.

அதன்பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி கலாவுக்கு வர ஜோயி குடும்பத்தாரிடம் இதுகுறித்து பலமுறை முறையிட்டுள்ளார். அதன்பின்னர் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், தக்கலை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் ஜோயியைக் கூப்பிட்டு மிரட்ட, அவருக்குச் சொந்தமான நிலத்தைக் கலாவுக்கு கொடுக்க ஜோயி ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின்னர் ஜோயி மார்த்தாண்டம் தாலுகா அலுவலகத்தில் தன்னுடைய 82 சென்ட் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்கும் வேலையினைச் செய்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்டு ஓடிவந்த கலா, ஜோயி காலில் விழுந்து கதறி அழுதார். ஜோயி மனம் இரங்காமல் இருக்க கலா போராட்டத்தைத் தொடர்ந்தார், போலீசார் கலாவை அங்கிருந்து கிளப்பியதுடன் ஜோயியையும் நிலத்தை விற்க விடாமல் துரத்தியுள்ளனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன