உங்கள் குழந்தை சாமர்த்தியசாலியாக வளர வேண்டுமா…? இந்த பழக்கங்களை கற்று கொடுங்க…

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய தலைமுறையினரை விட இப்போதைய தலைமுறை குழந்தைகள் மிகவும் சௌகரியமாக விரும்பக் கூடியது உடனே பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனாலே…

parenting

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய தலைமுறையினரை விட இப்போதைய தலைமுறை குழந்தைகள் மிகவும் சௌகரியமாக விரும்பக் கூடியது உடனே பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்களுக்கு மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கவும் செய்கிறார்கள். அப்படி தடுமாறாமல் உங்கள் குழந்தைகள் சாமர்த்தியசாலிகளாக வளர வேண்டும் என்றால் இந்த பழக்கங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

எந்த ஒரு விஷயத்தையுமே உங்கள் குழந்தையை திரும்பத் திரும்ப கடினமாக உழைக்க செய்யும்படி கற்றுக் கொடுங்கள். ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தாலும் கூட அவர்களை துவளவிடாமல் வெற்றி கிடைக்கும் என்று எடுத்து சொல்லி அதில் அதிகமாக கவனம் செலுத்தி மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வைக்கும் போது அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறும். எந்த ஒரு கடினமான சவால்களையும் எதிர்கொள்ள அவர்களுக்கு அது உதவியாக இருக்கும்.

உங்கள் குழந்தைகள் ஏதேனும் முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தால் உடனடியாக அவர்களுக்கு ஒரு வெகுமதியை கொடுங்கள். அது அவர்களை ஊக்கத்தோடு இருக்க வைக்கும்.ஒரு முயற்சி செய்து வெற்றி கிடைத்தால் அதனால் நமக்கு பரிசுகள் கிடைக்கும் என்று எண்ணத்திலேயே அவர்கள் அடுத்தடுத்து புதியவற்றில் முயற்சி செய்ய ஆரம்பிப்பார்கள்.

அதேபோல் உங்கள் குழந்தை மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருந்தால் அவர்களை ஒரு செயலை செய்ய வைப்பதற்கு அதற்கு முன்னதாக அவர்களை உந்துதல் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்களை நீங்கள் அவர்களை செய்ய சொல்லும்படி பழக்க வேண்டும். பெரிய விஷயங்களை அவர்களை செய்ய சொல்லுவதை விட சிறிய சிறிய விஷயங்களை அவர்களை முதலில் செய்ய வைத்துவிட்டு அதன் மூலமாக நீங்கள் அவர்களை என்ன பெரிய விஷயத்தை செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதன் வழி நடத்தலாம். இது வேண்டாம் என்ற தடையை உடைத்து அவர்கள் மேலே செல்வதற்கு உதவும்.

அதேபோல் ஒரு விஷயத்தை தொடங்கிய பின் எந்த ஒரு பழக்கமானாலும் சரி அதை தொடர்ந்து கடைபிடிப்பதற்கு அவர்களை ஊக்கப் படுத்துங்கள். ஒரு விஷயத்தை தொடர்ந்து அவர்கள் செய்து கொள்ளும்போது அது நற்பழக்கங்களாக மாறலாம். இது போன்ற விஷயங்களை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்தால் அவர்கள் கடினமான சூழ்நிலையிலும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் சாமர்த்தியசாலிகளாக வளர்வார்கள்.